Home » அது வேறு வர்க்கம்
நம் குரல்

அது வேறு வர்க்கம்

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் அந்தப் பதவிக்கு வந்தது அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் தங்கள் நாட்டுக்கும் நல்லது எனப் பல நாட்டு மக்கள் நினைக்கின்றனர். பெரும்பான்மை இந்திய மக்களின் கருத்தும் அதுதான் என்கிறார்கள். சவுதி அரேபியர்களும் ரஷ்யர்களும்கூட இப்படியொரு நம்பிக்கையிலிருக்கிறார்கள் என்கிறது ஒரு கருத்துக் கணிப்பு.

பாம்பு பால் குடிப்பதாகக் கூடத்தான் மக்கள் நம்புகிறார்கள். அதுவல்ல விஷயம். அமெரிக்காவுக்கு மட்டும்தான் அதிபர் என்றாலும் டிரம்ப் எடுக்கும் முடிவுகள் உலக நாடுகள் அனைத்திலும் எதிரொலிக்கும். நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு பாதிப்பை உண்டாக்கும். அதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

உக்ரைன், பாலஸ்தீன், சிரியா, ஆப்கனிஸ்தான் எனப் பல நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிபரின் முடிவு ஆதிக்கம் செலுத்தும். போர்கள் தொடர்வதும் முடிவுக்கு வருவதும் எப்போதும் போல அமெரிக்க அதிபரின் விருப்பத்தைப் பொறுத்ததுதான். ஆனால், காலநிலை மாற்றங்களைச் சமாளிக்க மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு நிதி கொடுப்பதில் டிரம்புக்கு ஆர்வம் இல்லை. உலகின் மொத்த எரிபொருள் பயன்பாட்டில் கிட்டத்தட்ட கால்பங்கு அமெரிக்காவினுடையது. வேறெந்தக் குப்பைகளைக் கணக்கிலெடுத்தாலும் அமெரிக்காதான் முதலிடத்தில். ஆனால் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க முடியாது என்கிற நிலைபாட்டினால் அதிக பாதிப்பை எதிர்கொள்ளப்போவது ஏழை நாடுகள்தாம்.

உலகச் சுகாதார அமைப்பில் இருந்து விலகும் முடிவும் அமெரிக்கக் குடியுரிமைச் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வருவதும் கூட பல்வேறு நாடுகளில் மாற்றம் ஏற்படுத்தவல்லது. ஆண், பெண் தவிர வேறு பாலினம் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார் டிரம்ப். பொதுவாகப் பாகுபாடுகளற்ற சமூகம் தேவை என்பதிலேயே எதிர்க்கருத்து கொண்டவர் டிரம்ப்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்