முற்றிலும் கணினி மயமாக மாற்றப்பட்ட கல்விக் கூடங்களில், மீண்டும் அச்சடித்தப் புத்தகங்களைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது ஸ்வீடன் அரசு.
2009ஆம் ஆண்டு, பிற நாடுகளுக்கு முன்னோடியாக மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப தங்கள் கல்விக் கூடங்களில் டிஜிட்டல் திரையைக் கொண்டு வந்தது ஸ்வீடன். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் புத்தகங்களைக் கொண்டு வர முடிவெடுத்திருக்கின்றனர். காரணம்? கணினியில் கற்பதால் அடிப்படைத் திறன்களான படித்தல், எழுதுதல் போன்றவை பிள்ளைகளுக்கு வளரவில்லை என்று ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கின்றனர் கல்வியியல் வல்லுநர்கள்.
ஸ்வீடனைப் பின்பற்றி அயர்லாந்தும் கூட தங்கள் பள்ளிகளுக்குள் கணினியைக் கொண்டு வந்தது. ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முன்னோடியாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் விளைவுகளை ஆராய்ந்த போது, மாணவர்களின் எழுதும் படிக்கும் திறன் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதனால் அடிப்படைத் திறன்களை வளர்க்கும் பொருட்டு சுமார் நூறு மில்லியன் யூரோ செலவில் அச்சுப் புத்தகங்களைக் கொண்டு வரவிருக்கிறது ஸ்வீடனின் பள்ளிக் கல்வித் துறை.
இந்தியாவைப் பொறுத்தவரை நாம் எந்தப் பெரிய செயல் திட்டத்துக்கும் முன் மாதிரியாக மேற்கத்திய நாடுகளின் நடைமுறையைத்தான் எடுத்துக் கொள்வோம். ஸ்வீடனின் இந்த முடிவு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இந்தியாவில் எந்தளவுக்கு டிஜிட்டல் கற்றல் முறை வளர்ந்திருக்கிறது? சுருக்கமாகப் பார்க்கலாம்.
Add Comment