Home » வெண்பனிப் பொங்கல்
தமிழர் உலகம்

வெண்பனிப் பொங்கல்

‘இந்தியா, நார்வே இடையேயான வர்த்தகப் பரிமாற்றங்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் இப்போதிருப்பதை விடப் பல மடங்கு அதிகரித்திருக்கும்’ என்கிறார் இந்தியாவுக்கான நார்வே தூதர் மே எலின் ஸ்டேனர். கடந்த ஜூன் மாதம் சென்னையில் ஒரு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியிருந்தார்.

வட ஐரோப்பியப் பகுதியான ஸ்கான்டினேவிய தேசங்களில் ஒன்றான நார்வே பல காரணங்களுக்காகப் புகழ்பெற்றது. மூன்றில் இருபங்கு மலைத்தொடர்கள். அதுவும் செங்குத்தானவை. பிஜோர்ட் எனப்படும் அம்மலைகளுக்கிடையே ஓடும் கடல் நீரோட்டம், ஆயிரக்கணக்கான ஏரிகள், தீவுகள், நீண்டு பரந்துவிரிந்த கடற்கரைகள். இவை அனைத்திற்கும் கிரீடம் வைத்தாற்போல் வானில் தோன்றும் வட துருவ ஒளிக்கீற்றுக்கள் என இயற்கையின் மொத்த அற்புதங்களும் ஒருசேரப்பெற்றது. வெயில்காலங்களில் சூரியன் மறையாத, குளிர் நாள்களில் சூரியன் உதிக்காத பிரதேசம் இருப்பதால் தான் ‘நள்ளிரவிலும் சூரியன் உதிக்கும் நாடு’ நார்வே. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரசித்தி பெற்ற வைகிங்குகள் ஆதிக்கம் செலுத்திய பிராந்தியங்களுள் ஒன்று.

உலகில் அமைதியை விரும்பும் தேசங்களில் முன்னணி வகிக்கும் நார்வே, போரினால் பாதிக்கப்படும் பல நாடுகளுக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பதோடு, இயன்ற உதவிகளையும் எப்போதும் செய்து வருகிறது. அப்படி 2000ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நடைபெற்று வந்த போரில் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து, போர்நிறுத்தத்தைக் கொண்டுவரவும் முயன்றது. அது பெரிதாகப் பலனளிக்கவில்லை எனினும், அகதிகளாக வந்த மக்களுக்கு அடைக்கலம் அளித்தது. அப்படிதான் 1980களில் இலங்கைத் தமிழர்கள் ஏராளமானோர் நார்வே சென்றனர். அப்போது மீன்பிடித் தொழில் அங்குள்ளோரின் வாழ்வாதாரமாக இருந்தது. அதைக் கற்றுக்கொள்வதற்காகவே பலரும் ஆர்வம் காட்டினர். நார்வேயில் உள்ள இந்திய, இலங்கை, மலேசியத் தமிழர்கள் இணைந்து 1979ஆம் ஆண்டு தொடங்கியது தான் நார்வே தமிழ்ச் சங்கம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!