மெக்சிகோ உள்ளிட்ட இதர மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து புலம்பெயர நினைக்கும் மக்களின் கனவில் மண்ணை அல்ல; பாறாங்கல்லையே தூக்கிப் போட்டுள்ளன அமெரிக்காவின் புதிய விதிமுறைகள்.
உலகின் ஓய்வில்லாத எல்லையாகச் சொல்லப்படுவது அமெரிக்காவின் தெற்கு திசையிலுள்ள மெக்சிகோ எல்லை. தினசரி சுமார் ஆறாயிரம் மக்கள் இங்கே இடம்பெயர்கின்றனர். தங்கள் குடியுரிமை, மண், மக்கள், கலாசாரம் போன்றவற்றைப் புறக்கணித்துவிட்டுப் பாதுகாப்பான வாழக்கையை நாடி அமெரிக்கா வருகிறார்கள். பெரும்பாலானோர் மெக்சிகோ, மத்திய அமெரிக்க நாடுகளான குவாட்டமாலா, எல் சால்வடோர், ஹோண்டுராஸ் மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளான வெனின்சுலா, எக்குவடோர் போன்ற நாடுகளிருந்து வருபவர்கள். உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன. இதில் 120 நாடுகளிருந்து இந்த வழியாகவே மக்கள் வருகிறார்கள்.
பிறந்தவுடன் சாதியால் பிரிவினை இருக்கக்கூடாது என்று இந்தியாவில் போராடுகிறோம். இப்பகுதி மக்கள் அங்கே பிறந்திருக்கவே கூடாது என்று போராடுகிறார்கள். இந்நாடுகள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவை. இந்நாடுகளின் ஜிடிபியை மொத்தமாகக் கூட்டினாலும் அமெரிக்காவின் கால்வாசிக்கும் சமமாகாது.
Add Comment