Home » ஒரு குடும்பக் கதை -141
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -141

141. அதிர்ச்சி வைத்தியம்

அமெரிக்கப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபரின் கவனத்தை பெரிதும் ஈர்த்தார் இந்தியப் பிரதமர் என்பதற்குச் சாட்சியாக இன்னொரு சம்பவம் நடந்தது. வெள்ளை மாளிகையில் இந்திரா காந்திக்கு ஒரு விருந்து அளித்தார். அப்போது, அவர்கள் கலாசாரத்தின்படி ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இந்திரா காந்தியை தன்னுடன் கைகோர்த்து நடனமாட அழைத்தார்.

ஆனால், அவரோடு சேர்ந்து நடனம் ஆடினால், அது இந்தியாவில் தன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிடும் என்று நினைத்து, இந்திரா காந்தி நாசூக்காக நடனம் ஆட மறுத்துவிட்டார்.

மற்றபடி, தான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் இந்தியப் பிரதமரின் பேச்சுக்கள் எல்லாம் சவசவ என்றுதான் இருந்தன.
வாஷிங்டன் தேசிய பிரஸ் கிளப்பில் இந்திரா காந்தி சொன்ன விஷயம் சற்றே மீடியாவின் கவனத்தை ஈர்த்தது. அங்கே அவர், “ ஆண்கள் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கும் அரசியலில் பெண்களும் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும்” என்று கூறினார்.

நியூயார்க்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் “காஷ்மீர் இந்தியாவின் அங்கம். அங்கே மக்களின் விருப்பம் என்ன என்று வாக்கெடுப்பு அவசியமில்லை. இரண்டு முறை அத்துமீறி இந்தியாவின் மீது போர் தொடுத்த பாகிஸ்தான் விஷயத்தில் ஐ.நா.வின் வாக்கெடுப்புத் தீர்மானத்துக்கு அர்த்தமே இல்லை. இந்தியாவில் இன்னொரு பிரிவினையை கனவிலும் அனுமதிக்க முடியாது” என்பதை அழுத்தமாகச் சொன்னார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!