Home » பதில் சொல்லும் புதிய பூதம்!
அறிவியல்-தொழில்நுட்பம்

பதில் சொல்லும் புதிய பூதம்!

அரவிந்த் ஶ்ரீநிவாஸ்

ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள நாம் உடனே போவது கூகுள் தேடுபொறிக்கு. கடந்த இருபது ஆண்டுகளாக கூகுள் தேடுபொறிக்கு இணையான தரத்தில் மாற்றாக வேறு எதுவுமே அருகில் கூட வர முடியாத நிலையில், தற்போது வந்து இருக்கிறது பெர்ப்ளெக்சிட்டி ஏஐ (Perplexity AI). உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த செயலி நம் சென்னையில் பிறந்தவரான அரவிந்த் ஶ்ரீநிவாஸ் மற்றும் குழுவினரின் தயாரிப்பு.

முப்பது வயது இளைஞரான அரவிந்த் யார்? பார்க்க அமுல் குழந்தையைப் போன்ற தோற்றம், 80களில் பிரபலமாக இருந்த பெரியளவு வட்ட மூக்கு கண்ணாடி இதுதான் அரவிந்த் ஶ்ரீநிவாஸ். வயது சுமார் முப்பது. பிறந்தது சென்னையில். பிடித்தது கிரிக்கெட். ஐ.ஐ.டி. மெட்ராஸில் மென்பொருள் பொறியாளர் பிரிவில் இடம் கிடைக்காததால் மின்சார பொறியியல் பிரிவில் சேர்ந்து, தானாக பைத்தான் மொழியைக் கற்று தேர்ந்தார். ஐ.ஐ.டி. மெட்ராஸில் தனது தொழில்நுட்ப முதுகலை பட்டக் கல்வியை முடித்தவுடன் அமெரிக்காவில் இருக்கும் யூ.சி.பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆராய்ச்சிக்கு சேர்ந்தார்.

அங்கே அரவிந்த் தேர்ந்தெடுத்த துறைகள் செயற்கை நுண்ணறிவும், இயந்திரக் கற்றலும். அப்போது அவர் வேலை செய்தது கணினிக்குப் பார்வையைக் கொடுக்கும் முயற்சிகளில். கம்ப்யூட்டர் விஷன் என்பது ஒரு படத்தை, காட்சியை மென்பொருளுக்கு உள்ளீடாகக் கொடுத்தால் அதில் என்ன இருக்கிறது, எந்த இடம், யார் யார், எந்தச் சூழல் என்பதை விளக்கக் கூடிய திறனை உருவாக்குவது. கூடுதலாக படங்களை ஏஐ மூலம் வரையும் முயற்சிகளிலும் ஈடுபட்டார். இவற்றைப் பார்த்து முன்னணிச் செயற்கை நுண்ணறிவுப் பிரிவான பிரிட்டன் டீப்-மைண்ட்டில் (DeepMind) ஆராய்ச்சியாளராகச் சில மாதங்கள் இருந்தார். டீப்-மைண்ட்டில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு 2024ஆம் ஆண்டு வேதியியலில் நோபல் பரிசு கிடைத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன் பிறகு அரவிந்த் கூகுள் நிறுவனத்திலும், சாட்ஜிபிடியை தயாரித்த ஒபன்ஏஐ நிறுவனத்திலும் பணி புரிந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!