“சிஸ்டம் ரொம்ப ஸ்லோவாயிருச்சு” என்ற சலிப்பில் தொடங்குகிறது புதுக் கம்ப்யூட்டர் வாங்கும் கதை. நல்ல கம்ப்யூட்டர் வாங்குவது எப்படி என்பது எவர் க்ரீன் கொஸ்டின். அக்கேள்விக்கான விடையில் பெரும்பங்கு வகிப்பவை மைக்ரோப்ராசஸர்கள்.
முதலில் என்ன செய்யவே கூடாது என்று பார்த்துவிடுவோம். ஜவுளிக் கடைக்குச் சேலை வாங்கக் கிளம்புவது போலக் கம்ப்யூட்டர் ஷோரூமுக்கு செல்லக் கூடாது. என்ன மாதிரியான கம்ப்யூட்டர் வாங்கவிருக்கிறோம் என்ற கான்ஃபிகுரேஷனை முதலில் தயாரிக்க வேண்டும். கான்ஃபிகுரேஷன் என்பது கம்ப்யூட்டரின் ஜாதகம். ஒரு கம்ப்யூட்டரை நாம் எதற்காகப் பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொறுத்தது அதன் கான்ஃபிகுரேஷன். ஜிபியூ இல்லாத சிஸ்டம் வாங்கவே கூடாது என்பதுபோன்ற மூட நம்பிக்கைகளை முற்றிலும் தவிர்த்தல் நலம்.
அடுத்து, மைக்ரோப்ராசஸர் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். எனக்கெல்லாம் அத்துப்படி என்பவர்கள் அடுத்த பத்தியை சாய்ஸில் விட்டுவிடவும்.
Add Comment