142. இந்திராவின் மூக்கு
கடந்த முறை நேரு தலைமையில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி, இந்த முறை இந்திரா காந்தியின் பாபுலாரிடியை வைத்தே தேர்தலை எதிர்கொண்டது.
ஆனால், மூத்த கட்சித் தலைவர்களின் அடிமனத்தில், இந்திரா காந்தியை வைத்துக் கொண்டு தேர்தலில் ஜெயித்துவிட்டு, அதன் பிறகு அவரை கழற்றி விட்டுவிடலாம் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.
கடந்த தேர்தலைவிட இந்த முறை இன்னும் 15 பாராளுமன்றத் தொகுதிகள் கூடுதலாக இருந்தன. இப்போது மொத்தம் 523 தொகுதிகள். அவற்றில் 520க்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 1967 பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கிய தேர்தல் ஐந்தே நாள்கள், அதாவது 21ஆம் தேதி முடிவடைந்தது.
பாராளுமன்றத் தேர்தலுடன் கூடவே மாநில சட்டமன்றங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. இதுவே பாராளுமன்றத்துக்கும், மாநில சட்ட மன்றங்களுக்கும் சேர்ந்து நடத்தப்பட்ட கடைசி தேர்தல்.
Add Comment