நகலெழுத்து
ஈ-மெயில்களுக்குப் பதிலளிப்பது என்பது ஒரு கலை. இதற்கெனப் பிரத்தியேகமான பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன.
முன்பெல்லாம் நமக்கு வரும் ஈமெயில்களில் எக்கச்சக்கமான பிழைகள் இருக்கும். தற்போது பிழைகளுடன் எழுதப்படும் ஈமெயில்கள் பெருமளவு குறைந்துவிட்டன. உங்கள் ஈமெயில் இன்பாக்ஸைப் பார்த்தாலே புரியும்.
நீங்கள் ஓர் ஆசிரியரெனில் நான் சொல்வதைக் கட்டாயம் உணர்ந்திருப்பீர்கள். இப்போதெல்லாம் மாணவர்களிடமிருந்து வரும் ஈமெயில்கள் பிழைகளேதுமின்றிச் சுத்தமாக இருக்கின்றன. டெட்டால் போட்டுக் கழுவியது போல.
என்ன காரணம்? நம்மூரில் ஓர் ஆங்கிலப் புரட்சி நடந்துவிட்டதா என்ன? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இதுவும் குட்டிச்சாத்தானின் கண்கட்டி வித்தைகளில் ஒன்று. ஜெனரேட்டிவ் ஏ.ஐ செய்யும் மாயம். சாட்ஜிபிடி, க்ளாட் போன்ற எல்.எல்.எம்களின் கைங்கரியம்.
ஜெனரேட்டிவ் ஏ.ஐ வந்த புதிதிலேயே அதிகம் பேசப்பட்ட ஒன்று ஈமெயில் எழுதுவது. சரசரவெனச் சரளமாக ஈமெயில்களையும் அதற்கான பதில்களையும் எழுதிக்கொடுத்தது ஏ.ஐ.
Add Comment