அண்மையில், ஓர் எலி முதிர் பருவமடைந்ததைக் கண்டு அதிசயித்தது அறிவியல் உலகம். இதில் அதிசயிக்க என்ன இருக்கிறது? என்றால், அந்த எலி இரண்டு ஆண் எலிகளுக்குப் பிறந்தது. மூலச்செல் (Stem Cell) தொழில்நுட்பம் மற்றும் மரபணு உருப்பதிவுத் (Imprinted Genes) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதைச் சாதித்துள்ளது ஓர் ஆராய்ச்சிக்குழு.
இயற்கையில், ஒரு குழந்தைக்குத் தாயின் குரோமோசோம்களும் தந்தையின் குரோமோசோம்களும் சரிபாதியளவில் வந்துசேரும். தந்தையிடமிருந்தே அனைத்து குரோமோசோம்களையும் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. தாய்வழியில் கிடைக்கவேண்டிய ஜீன்கள் குழந்தைக்குக் கிடைக்காமல் போய்விடும். இது குழந்தையின் வளர்ச்சியைப் பாதிப்பதோடு மரபுவழி நோய்களையும் ஏற்படுத்தும்.
இவ்வளவு சிக்கல்களைத் தாண்டியும் இந்த ஆராய்ச்சி வெற்றிபெற்றுள்ளது. மொத்தம் ஐந்து படிநிலைகளைக்கொண்டுள்ளது இவ்வாராய்ச்சி.
முதலாவதாக, அண்டஅணுவைத் தயாரித்தல். இதற்காக, ஸ்டெம் செல்கள் எனப்படும். மூலச்செல்கள் தேவைப்பட்டன. ஸ்டெம் செல்களைக்கொண்டு வெவ்வேறு தேவைகளுக்கான செல்களை உருவாக்கிக்கொள்ள முடியும். குழந்தையின் கருவிலிருந்து பெறப்படும் ஸ்டெம் செல்கள் (Embryonic Stem Cells) முதல் தரமானவை. இவற்றைக்கொண்டு எந்தவொரு மனித உறுப்பையும் ஆய்வகத்தில் உருவாக்கிவிடமுடியும். இந்த உறுப்புகளை உறுப்புப்போலிகள் (Organoids) என்றழைக்கின்றனர்.
Add Comment