Home » எனதன்பே, எருமை மாடே! – 13
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே, எருமை மாடே! – 13

13. துரோகமும் மன்னிப்பும்

பழிக்குப் பழி. இரத்தத்துக்கு இரத்தம். சொல்வதற்கு நன்றாக இருக்கும். சினிமாவில் கதாநாயகன் பழி வாங்குவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நிஜ வாழ்க்கைக்கு எவ்வளவு உதவும்? ஆங்கிலத்தில் இதனை eye for an eye என்று சொல்வார்கள். என் கண்ணைக் குத்தினால் உன் கண்ணைக் குத்துவேன் என்பதுதான் இதன் அர்த்தம். இதற்கு மகாத்மா காந்தி An eye for an eye will only make the whole world blind என்று சொன்னாராம். அகிம்சையைப் பின்பற்றியவர் காந்தி என்பதால் அவர் அதைச் சொன்னதில் ஆச்சரியம் இல்லை. ஆனாலும் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று சிந்தித்துப் பாருங்கள்.

பழிக்குப் பழி என்பது ஒருவர் நம்மை உடல் ரீதியாகத் தாக்கும்போது தற்காப்புக்காகத் திருப்பித் தாக்குவது என்பது பற்றியதல்ல. பொதுவாக நமக்கு இழைக்கப்பட்ட தீங்குக்கு உடனடியாக எதிரியை ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஆகவே பதிலடி கொடுக்கச் சரியான சந்தர்ப்பம் தேடிக் காத்திருப்பதே நாம் செய்வது. சரியான சந்தர்ப்பம் அடுத்த நாளாகவும் இருக்கலாம் பல தசாப்தங்களாகவும் இருக்கலாம். வாழ்நாள் முழுவதும் சந்தர்ப்பம் கிடைக்காமலும் போகலாம். அதுவரை பழி வாங்கும் எதிர்மறை உணர்வோடு வாழ்வது நாம்தானே தவிர அதனால் எதிரிக்கு ஒரு பாதிப்பும் இல்லை.

இன்றைய காலகட்டத்தில் வன்முறையை யாராவது நம் மீதோ அல்லது நமது சொத்துகள் மீதோ பயன்படுத்தினால் அதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதன் மூலம் நியாயம் பெறும் வாய்ப்பு உண்டு. தற்காப்புத் தவிர்த்து திட்டமிட்டுப் பழிவாங்கும் நோக்கத்துடன் நாம் வன்முறையைப் பயன்படுத்தினால் அதனால் நமக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் வாய்ப்புகள் உண்டு. சினிமாவில் ஹீரோ செய்வது போல நிஜ வாழ்க்கையில் ஒரு பின்விளைவும் இல்லாமல், எதிரிகளை அடித்து நொறுக்க முடியாது. ஆகவே வன்முறை சார்ந்த தீங்குகளுக்குப் பழி வாங்க முற்படாமல் சட்டத்தின் கையில் அதனை விட்டு விடுவதே சாலச் சிறந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!