வசந்த பஞ்சமி, அக்ஷயத் திருதியை மாதிரி தமிழ்நாட்டில் திடீர் பிரபலம் அடைந்த கொண்டாட்டம் போலல்லாது, தொன்றுதொட்டு வரும் பண்டிகை தைப்பூசம். தமிழர் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொங்கல், தீபாவளியைப் போலவே தைப் பூசமும் மிக முக்கியமான பண்டிகை.
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் திருவிழாக்களில் முதன்மையானது, தைப்பூசம். தை மாதம் வரும் பூச நட்சத்திரத்தில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. அன்று அறுபடை வீடுகளிலும், முருகன், சிவன் கோயில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.
பண்டிகை என்றாலே அதற்குப் பின்னால் ஒரு புராணக் கதை இருக்கும். தைப்பூச விழாவின் பின்னாலும் ஏராளமான கதைகள் உண்டு.
அசுரர்கள் வழக்கம்போல தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தனர். அவர்களை அழிக்க தேவர்களால் முடியவில்லை. தங்களுக்குத் தலைமை தாங்கிப் போரிடக் கூடிய சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்கித் தர வேண்டுமென சிவபெருமானிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். ஆறுமுகங்களோடு கந்தன் அவதரித்தார்.
Add Comment