மிகப் பெரிய மக்களாட்சியின் தலைவர் தானாகவே விரும்பிக் கேட்டுக்கொண்டு அமெரிக்க அதிபரைச் சந்திக்க வந்து சென்றார். இதைத்தான் வெற்றிகரமான பயணமாக நமது ஊடகங்கள் கொண்டாடுகின்றன.
அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு மோடிக்கு அழைப்பிதழ் இல்லை. அனைத்துத் தூதரகங்களுக்கும் அமெரிக்க மரபின்படி அனுப்பப்பட்டது, இரண்டு அழைப்பிதழ்கள். அதில் ஒன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எடுத்துக்கொண்டு வந்து பங்கேற்றார். இந்தியா சார்பாக வந்தவரை கவனிக்கக்கூட இல்லை.
இதனைப் பொருட்படுத்தாமல் இந்தியப் பிரதமர் டிரம்ப்பை விரும்பிச் சந்திக்க நேரம் கேட்டு வந்தார். இஸ்ரேல், ஜப்பான், ஜோர்டான் தலைவர்கள் அதிபரின் அழைப்பின் பேரில் வந்ததால், மாளிகையின் வாயிலுக்கு, அதிபரே வந்து அழைத்துச் சென்று விருந்தோம்பினார். ஆனால், தானே நேரம் கேட்டு வந்த இந்தியப் பிரதமரை வாயிலுக்கு வந்து அழைத்துச் சென்றது, வெள்ளை மாளிகை அதிகாரி.
மோடியின் அமெரிக்கப் பயணம் – பத்மா அர்விந்த்
அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை நமக்கு அவ்வப்போது தமது கட்டுரையின் மூலம் பத்மா அர்விந்த் தெளிவுபடுத்தி வருகிறார்.
அதிலும் இந்த வார கட்டுரை மிகவும் தெளிவு. இங்கே பல தினசரிகள், வார, மாத இதழ்களெல்லாம் பிரதமரின் அமெரிக்கப்பயணத்தை ஆஹா, ஓஹோ, பேஷ் … பேஷ்…. என்று எழுதியிருந்தன. (இங்கு அப்டித்தான் எழுத முடியும்)ஆனால் கட்டுரையைப் படித்த பின்புதான் அந்த பயணத்தில் இருந்த ஓட்டைகள் தெரிகின்றன. சம நோக்கு இருந்தால் மட்டுமே சமரசம் செய்து கொள்ளாமல் இது போன்ற கட்டுரை எழுத முடியும்.
பாபநாசம் நடராஜன்