மக்களுக்குக் குறைந்த விலையில் ஜெனிரிக் மருந்துகளை விற்பனை செய்யும் முதல்வர் மருந்தகங்களைத் திறந்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் மக்களின் மாதாந்திர செலவில் கணிசமாக மிச்சமாகும்.
உலகளாவிய மருந்துச் சந்தையில் இந்தியா பதிமூன்று சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இதன் தொடக்கம் 1970ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த காப்புரிமைச் சட்டம். இதன்படி மருந்துப் பொருள்களுக்குக் காப்புரிமை வாங்க முடியாது. அதை உருவாக்கும் செய்முறை மட்டுமே காப்புரிமை விதியின் கீழ் வரும். எனவே செய்முறையில் சிறிய மாறுதலைச் செய்து புதிய காப்புரிமையுடன் ஏராளமான நிறுவனங்கள் மருந்துகளைத் தயாரிக்க ஆரம்பித்தன.
நம் குரல் – மருந்தாகும் மக்கள் சேவை
தற்போது மக்கள் ஓரளவுக்கு மக்கள் மருந்தகத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரைகள் மிகக் குறைவான விலையில் கிடைப்பதும் அந்த மருந்து நன்றாக வேலை செய்வதாகவும் கருதுகிகின்றனர்.
தற்போது மாநில அரசின் முதல்வர் மருந்தகத்தில் சர்ஜிகல் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி.
இப்போதெல்லாம் பெரும்பாலான மருத்துவர்கள் அவர்கள் அலோசனை மையத்திலேயே ஒரு மருந்தகமும் வைத்துக் கொள்கின்றனர். அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் அங்கு மட்டுமே கிடைக்குமாறும் பார்த்துக் கொள்கின்றனர். மருத்துகளை வாங்காமல் நோயாளி வெளியேறிவிடமாலும் பார்த்துக் கொள்கின்றனர். ஏதேனும் பொய் சொல்லி தப்பித்தால்தான் உண்டு. இதையெல்லாம் மீறி மக்கள் மருந்தகத்தைப் பயன்படுத்துவோர் உண்டு. விவரம் அறிந்தவர்கள் மருந்து பெயர் சொல்லி வாங்கிவிடுகிறார்கள். தெரியாதவர்கள் மாத்திரை அட்டையைக் காண்பித்து வாங்குகிறார்கள்.
ஆனால் மருத்துவர்களிடம் கேட்டால் நமக்கு சரியான பதில்கள் கிடைக்காது. மனசாட்சியுள்ள நேர்மையான மருத்துவர்கள் பதில் சொல்கிறார்கள்.
உயிர்மேல் உள்ள பயம்தானே அதை குறைத்துக் கொண்டால் எல்லா மருந்துமே வேலை செய்யும்.
முதல்வர் மருந்தகங்கள் மக்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்.
பாபநாசம் நடராஜன்