Home » சக்கரம் – 7
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 7

7 பிரயாணம்

கேட்காமலே ஜன்னலோரம் கிடைத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய பச்சை உருளைப் பையை சீட்டுக்கு அடியில் உருட்டிவிட்டான். எதிர் சீட்டுக்காரர் நடுவயது. தேங்காய் பத்தையைக் கவ்விக்கொண்டிருப்பதைப்போல வெளியில் நீட்டிக்கொண்டிருந்த வெளேரென்ற பற்களுடன் இருந்ததால் சிரிக்காத முசுடாக இருந்தாலும் சிரித்த முகமாகத் தெரிந்தார். பல்லுக்கு எடுப்பாக நெற்றியில் பட்டை வேறு. முன்பல்லுக்குப் பேர் போன மாத்வர்களுக்கே சவால் விடுகிற அளவில் இருந்தார். வந்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான்.

அப்பா 5.8 என்றால் அம்மா 4.10 இருந்தாலே அதிகம் என்பதால் என்பதால் சராசரி இந்திய உயரமான ஐந்தரை அடியைத் தொடவே அவன் பியூசியைத் தாண்டவேண்டியிருந்தது. எனவே பக்கவாட்டு பர்த்துகள்கூட இவனைவிட நீளமாக இருக்கும். வயிறில்லாத காரணத்தால் பக்கவாட்டில் மரவட்டைபோல சுருண்டு படுப்பவன் என்பதால் மேல் பர்த்தாகவே இருந்திருந்தாலும் பிரச்சனையில்லை. கிடைத்தது கீழ் பர்த் என்பதால் ஏறி இறங்கும்போது தவறிப்போய் எவருடைய கையையோ காலையோ மிதித்துவிடக்கூடிய அபாயமும் இல்லை.

ஒன்றிரண்டாவது பார்க்கும்படி இருந்திருந்தால் மேல் பர்த்து கிடைக்காமல் போனதில் கள்ளப் பார்வை பார்க்கமுடியவில்லையே என்கிற வருத்தமாவது இருந்திருக்கும். நடைவழிக்கு அடுத்திருந்த ஆறிலும் பேருக்கு ஒரு பாட்டிகூட இல்லை. பேசக்கூடத் தோன்றாதபடிக்குப் பெரும்பாலும் வேட்டிகளாக வேறு இருந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!