கங்கை நீர் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் வல்லமை கொண்டது என்று ஓர் ஆய்வு முடிவினை உத்தரப்பிரதேச அரசு வழங்கியுள்ளது. உலகின் ஒரே நன்னீர் நதி கங்கை மட்டும்தான் என்றும் ஓர் ஆய்வுக்குழுவைக்கொண்டு உறுதி செய்திருக்கிறது. இது உண்மைதானா? அறிவியல் என்ன சொல்கிறது?
இந்தியாவில் பிறந்த ஹிந்துக்கள் அனைவருக்கும் காசி, கங்கை, கீதை, காயத்ரி மந்திரம், கோமாதா என்கிற ஐந்து விஷயங்கள் முக்கியமான கடமைகளாகக் கருதப்படுகின்றன. மிக முக்கியமாக, தங்களது இறுதிக் காலத்துக்குள் காசிக்குச் சென்று கங்கை நீராடுதலை மிக முக்கியமான வாழ்வுச் சடங்காகவே கொண்டிருப்பர். மகாபாரதக் காலத்திலிருந்து புனிதமான நதியாகக் கருதப்படும் கங்கையை முதலில் காணும் எவன் ஒருவனும் அதிர்ந்து போவான். மிகக்குறிப்பாக தெளிந்த நீரோடையெனக் காவிரியையும், கோதாவரியையும் கண்ட தென்னிந்தியர்கள். அதுதான் கங்கையா என்ற திடுக்கிடலுக்கு ஆளாவார்கள். அதன் மாசும், கலங்கிய தன்மையும் சட்டென ஒரு விலகலை ஏற்படுத்தும். ஆயினும் பண்பாட்டுக்கடன் என்பதால் அதைப் பற்றிய குறைகள் ஏதுமின்றி கடந்துசென்று விடுவர்.
பிரயாக்ராஜில் முடிவடைந்த கும்பமேளா நிகழ்வின்போதும் அதுவே நிகழ்ந்தது. திரிவேணி சங்கமத்தில் நீரைக்கண்டபோது அனைவருக்கும் அதே எண்ணமே மேலெழுந்து வந்தது. ஆயினும் கேள்விகள், தங்கள் மதத்தின் ஆதார நம்பிக்கையைக் குலைக்கும் என்பதால் சிலர் அமைதி காத்தனர். ஆனால் பலர் கேள்வி எழுப்பினர்.
Add Comment