நம்பிக்கை, நாணயம், கைராசி என்று பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டுத் தங்கத்தை வாங்குவது இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. இன்றைய தலைமுறை பலமடங்கு நம்பிக்கையுடன் வாங்கிச் சேமிப்பது பிட்காயின்களைத்தாம். இதையும் திருடி இவ்வுலகில் எதுவுமே நிரந்தரமில்லை என்று நிரூபித்துள்ளது வட கொரியா.
பைபிட் என்ற துபாயைச் சேர்ந்த கிரிப்டோ பரிமாற்ற நிறுவனத்தின் ஒன்றரை பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள டிஜிட்டல் சொத்துகளைத் திருடியுள்ளது வடகொரிய சைபர் கிரைம் கும்பல். இதைச் செய்தது லாசரஸ் கும்பல் என்றும், எப்படிச் செய்தார்கள் என்றும் கண்டுபிடித்துவிட்டார்கள். இதில் திருடியவை எங்கு வர்த்தகம் செய்யப்படுகின்றன என்று கண்டுபிடிப்போருக்கும், அதை முடக்குவோருக்கும் சுமார் நூற்று நாற்பது மில்லியன் டாலர்களைப் பரிசுத்தொகையாக அறிவித்திருக்கிறார்கள். இதனால் பிட்காயின் விலையில் கொஞ்சம் வீழ்ச்சி ஏற்பட்டாலும், வெகு விரைவில் சந்தை சரியாகிவிடும். அமெரிக்காவின் புதிய அதிபரின் ஆதரவு உள்ளவரை பிட்காயின்களின் மவுசு குறையப்போவதில்லை.
நம்பகமான கிரிப்டோ நாணயங்களை எப்படித் திருடியது வடகொரியா?
Add Comment