மனத்தின் கண்ணாடி
குட்டிச்சாத்தான் நம் வேலைகளை இலகுவாக்குகிறது. ஆனால் வேலை மட்டுமா வாழ்க்கை? மனத்தை மகிழ்வாக வைத்திருப்பதும் அவசியம். அதற்கான பொழுதுபோக்கிற்கும் குட்டிச்சாத்தான்களைப் பயன்படுத்த முடியும். அப்படியொரு ப்ராம்ப்டைத்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
என்ன பொழுதுபோக்கு? முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று வந்தது. அந்நிகழ்ச்சியை நடத்திய நபர் காண்போர் பலரையும் வியக்கவைத்தார்.
நிகழ்ச்சியின் வடிவம் இவ்வாறிருந்தது: நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர் தன் மனத்தில் ஒரு நபரை நினைத்துக்கொள்ள வேண்டும். நிகழ்ச்சியை நடத்தும் மாஸ்டர் அடுத்தடுத்து சில கேள்விகளைக் கேட்பார். அக்கேள்விகளுக்குப் போட்டியாளர் சொல்லும் பதில்களின் அடிப்படையில் , அவர் மனத்தில் நினைத்திருந்த நபர் யாரென்று கண்டுபிடித்துச் சொல்வார்.
இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் வந்தபொழுது பெரும் வரவேற்பைப் பெற்றது. பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பலரும் தாங்களும் அந்நபர் யார் என்பதைக் கணிக்க முயன்றனர். இந்த ஈடுபாடு காரணமாக நிகழ்ச்சி, களை கட்டியது.
“நல்லாருக்கே… பட் அந்த மாஸ்டர எங்க தேடுறது…?” என்று சிந்திக்கத் தேவையில்லை. நம்மிடம்தான் ஒரு சகலகலா மாஸ்டர் இருக்கிறார் அல்லவா? யாரா…? கிளாடனார்தான்.
Add Comment