Home » எனதன்பே எருமை மாடே – 18
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே எருமை மாடே – 18

18. சேற்றில் புரளும் எருமை

வாழ்வில் சோர்வு என்பதை அடையாதோர் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். எவ்வளவுதான் மிகவும் விருப்பமான பணியில் இருந்தாலும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்போது சோர்வு ஏற்படுவது இயற்கை. அப்படியான சோர்வு ஏற்படும் நேரங்களில் சிலர் தங்களை வருத்தித் தொடர்ந்து தாங்கள் செய்யும் காரியத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் அப்படியான செயலால் அவர்களால் நீண்ட நாள்கள் தாக்குப் பிடிக்க முடியாது. ஆரம்பத்தில் சாதாரண சோர்வாக ஆரம்பித்து, பின்னால் மிகவும் பாரதூரமான விளைவுகளைக் கொண்டு வரும் டிப்ரெஷன் என அழைக்கப்படும் மன அழுத்தத்தைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடல் ரீதியாகவோ உள ரீதியாகவோ சோர்வு என்பது எமது உடல் எமக்குக் கொடுக்கும் எச்சரிக்கை சிக்னல். அதைப் புரிந்து கொண்டு நாம் செயல்படாவிட்டால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்.

உதாரணமாக நீங்கள் ஒரு நீண்ட தூரம் பயணம் போகிறீர்கள். அது நடைப் பயணம் என்று வைத்துக் கொள்வோம். இருபத்து நான்கு மணி நேரமும் உங்களால் தொடர்ந்து நடக்க முடியுமா? இல்லை. மாறாக ஒரு சில மணி நேரங்கள் நடந்த பின்னர் ஓய்வு எடுக்கிறீர்கள். அதன் பின்னர் மீண்டும் உங்கள் நடைப் பயணத்தைத் தொடரக் கூடியதாக இருக்கிறது. தொடர்ந்து நடக்கும் போது நமது கால் தசைகள் சோர்வடைகின்றன. ஓய்வு எடுப்பதன் மூலம் கால் தசைகளுக்கு மீண்டும் புத்துணர்ச்சி பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதன் பின்னர் நடப்பதற்குச் சிரமமாக இருக்காது. அதை விட்டுவிட்டுத் தொடர்ந்து கால் வலிக்க வலிக்க நடந்தோமானால் ஒரு கட்டத்தில் நம்மால் அதற்கு மேல் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது எனும் நிலைமைக்கு வந்தடைவோம். அதன் பின்னர் சோர்ந்துபோன கால்கள் மீண்டும் நடக்கும் தரத்திலான புத்துணர்ச்சி பெறுவதற்கு நீண்ட நேரம் தேவைப்படும்.

மேற்சொல்லப்பட்ட உடல் ரீதியான சோர்வு போலத்தான் மனத்தில் நமக்கு ஏற்படும் சோர்வும். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் போது மனத்தில் சோர்வு ஏற்படுவது இயற்கை. அதனை நாம் உணர்ந்து ஓய்வு எடுக்க வேண்டியது நமது உள நலத்துக்கு மிகவும் அவசியமானதாகும். நமது நலத்துக்காக சில காரியங்களைச் செய்ய வேண்டிய அவசியத்தை எருமைகளின் பண்புகளில் ஒன்றில் இருந்து நாம் கற்றுக் கொள்ளலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!