மேற்கூரை இடிவதெல்லாம் நமக்கு ஒரு செய்தியே இல்லை. சென்னை விமான நிலைய மேற்கூரை எத்தனை முறை இடிந்து விழுந்திருக்கிறது என்பதை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில்தான் தேட வேண்டும். ஆனால் செர்பியாவில் ஒரு ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து பதினைந்து பேர் பலியான சம்பவத்தின் தொடர்ச்சி, ஒரு மாபெரும் மாணவர் போராட்டத்துக்கு வித்திட்டிருக்கிறது. மேற்கூரை என்பதை ஓர் அவல ஆட்சியின் உதிரும் அடையாளங்களுள் ஒன்றாகக் கொள்ள முடியுமானால் இது புரியும்.
உலக வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தீர்களானால் ஐரோப்பாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடப்பட்ட குட்டி தேசங்களில் ஒன்றாகத் தெற்கு எல்லையில் செர்பியா தென்படும். இது யூகாஸ்லாவியாவின் சிதறலில் பிறந்த குழந்தை. ஆண்டுக்கு 80 பில்லியன் டாலர் ஜிடிபி கணக்குக் காட்டும் வளரும் நாடு. அங்கே மொத்தம் பத்தொன்பது பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன.
இதற்கும் ரயில் நிலைய மேற்கூரை இடிந்ததற்கும் என்ன சம்பந்தம் என்றால், இருக்கிறது.
Add Comment