போர் நிறுத்தத்தைக் கைவிட்டு இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதால் காஸா மீண்டும் போர்க்களமாகியுள்ளது. கடந்த ஜனவரியில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் இந்தத் தாக்குதல்களால் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திய கொரில்லா தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணயக்கைதிகளாகச் சிறைபிடித்துச் செல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் காயமடைந்தனர்.
அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் காஸா பகுதியின் மீது முழு வீச்சில் தாக்குதல்களைத் தொடுத்தது. விமானப் படையின் துணையோடு தரைப்படையினரும், பீரங்கிப் படைகளும் காஸா நகருக்குள் ஹமாஸ் குழுவினரை வேட்டையாடினர்.
Add Comment