Home » ராணுவத்தில் பெண்கள்: மேலே, உயரே, உச்சியிலே.
பெண்கள்

ராணுவத்தில் பெண்கள்: மேலே, உயரே, உச்சியிலே.

வீரமும் விவேகமும் என்ற குறிக்கோளுடன் இயங்கி வருவது டேராடூனிலுள்ள இந்தியாவின் பழமையான ராணுவ அகாடமி (IMA). அடுத்த வருடம் இதில் பயிற்சி பெற்ற எட்டு பெண் லெஃப்டினன்ட் அதிகாரிகளைப் பெருமையுடன் இந்திய ராணுவத்துக்கு வழங்கவிருக்கிறது இந்த அகாடமி. ஆயிரத்து ஐந்நூறு ஏக்கருக்குப் பரந்துள்ள அகாடமி 1500 மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் திறன் பெற்றது. 1932 ஆம் ஆண்டிலிருந்து ஆண்களுக்கு மட்டுமே பயிற்சியளித்து வரும் அகாடமி, வருகிற ஜூன் மாதம் முதல் பெண்களுக்கும் பயிற்சிகளை தொடங்கவுள்ளது.

ராணுவ அகாடமியில் சேர்வதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பயிற்சியை முடித்திருக்க வேண்டும். பெண்களும் இதில் அனுமதிக்கப்படலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததே 2021ஆம் ஆண்டுதான். இதுவரை நூற்று இருபத்தாறு பெண்கள் NDAவில் பயிற்சி பெறச் சேர்ந்திருக்கிறார்கள். ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து அதிகமானோர் ஆர்வத்துடன் வந்துள்ளனர். இதில் அடுத்த மாதம் பயிற்சியை முடிக்கவிருக்கும் பதினெட்டு பெண்களில் எட்டு பேர் ராணுவ அகாடமியில் சேர விண்ணப்பித்திருக்கிறார்கள். அடுத்த வருடத்திலிருந்து இந்திய ராணுவத்தின் நிரந்தரப் பணிக்கு இவர்கள் தங்களைத் தயாரித்துக் கொள்ளப் போகிறார்கள்.

பெண்கள் ராணுவத்தில் சேர்வதென்ன புதிதா எனக் கேட்பவர்கள் முதலில் குறுகியகால சேவை ஆணையத்தில் (SSC) சேர்வதற்கும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) சேர்வதற்குமான வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். குடியரசு தினத்தன்று நடக்கும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பில் பெண்கள் தலைமை தாங்கி செல்கிறார்களே? அதனால் அங்கு சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறது என்று கண்மூடித்தனமாக எண்ணிக்கொள்ள வேண்டாம். நிஜம் வேறு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்