Home » பத்தாயிரம் வருட ஓநாய்கள்
அறிவியல்

பத்தாயிரம் வருட ஓநாய்கள்

சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு அழிந்துபோன இனமான கொடிய ஓநாய்களை (Dire Wolves) மீண்டும் உயிர்த்தெழச்செய்துள்ளனர் விஞ்ஞானிகள்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடர் மூலம் நமக்கு இவை நன்கு அறிமுகமானவையே. அத்தொடரின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் இந்தக் கொடிய ஓநாய்களுக்கும் இடமுண்டு. செர்சியை எதிர்த்துப் போரிட தெற்கு செல்ல முடிவெடுக்கிறான் ஜான் ஸ்னோ. அவனது நண்பனும் பாதுகாவலனும் விசுவாசியுமான கோஸ்ட்டை அவன் உடனழைத்துச் செல்ல முடியாது. கோஸ்ட் வடக்கைச் சேர்ந்தவன். தெற்கின் தட்பவெப்பச்சூழலை அவனால் தாக்குப்பிடிக்க முடியாது. அதோடு, நடைப்பிணங்களுடனான யுத்தத்தில் ஜானுடன் தோள்கொடுத்துப் போரிட்டதால் கோஸ்ட் பலத்த காயமடைந்திருந்தான்.

பிரியும்முன் இருவரும் கட்டியணைத்துக்கொள்ளவில்லை. கடமை வீரர்களான இருவருக்கும் அத்தகைய சம்பிரதாயங்கள் தேவைப்படவில்லை. இருவரும் ஒருவரையொருவர் ஆழமாகப் பார்த்துக்கொள்கின்றனர். அந்தப் பார்வைகள் பல்லாயிரம் உணர்வுகளைக் கடத்திவிடுகிறது. ‘நீ என்னை எப்போதும் கைவிடவில்லை. புறக்கணிப்புகளிலும் போர்களிலும் துரோகங்களிலும் மரணத்திலும் அதன்பின் உயிர்த்தெழுந்ததிலும்கூட என்னுடனிருந்தாய். ஆனால், என்னால் உனக்குப் போரையும் இரத்தத்தையும் தவிர எதையும் தரமுடியாது. இது வடக்கு. சுதந்திர தேசம். நீயாவது சுதந்திரமாய் இரு. உண்மையான ஜானை உன்னிடம் உதிர்த்துச் செல்கிறேன்’ என்று பார்வையால் கூறுகிறான் ஜான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!