உலகிலேயே தரமான உயர்கல்வி கற்கப் பெரும்பான்மை மாணவர்கள் விரும்பும் நாடாக அமெரிக்கா பல வருடங்களாக இருந்து வருகின்றது. ஆனால் டிரம்ப் அரசு மேற்கொண்டு வரும் அதிரடிகளால் அந்நிலை கூடிய விரைவில் மாறிவிடும் போல் தெரிகின்றது.
2024ஆம் ஆண்டு மட்டும் சுமார் நான்கு இலட்சம் மாணவர்கள் அமெரிக்காவில் உயர் கல்வி படிக்க அனுமதிக்கும் F1 நுழைவிசைவு (விசா) வழங்கப்பட்டுள்ளன என்கிறது ஒரு தரவு.
மாணவரிடையே வேறெந்த நாட்டுக்கும் இல்லாத வரவேற்பு அமெரிக்காவிற்கு இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. உலகத்தரம் வாய்ந்த சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அமெரிக்காவில்தான் அதிகம் உள்ளன. அவை தரமான கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் உகந்த வலுவான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. மேலும் கல்வி வளாகங்களில் நிலவும் கலாசாரப் பன்முகத்தன்மையும் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் அமெரிக்காவில் மேற்படிப்பை விரும்புவதற்கு காரணம்.
Add Comment