Home » ஒரு குடும்பக் கதை – 153
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 153

153. தகரத்தில் செய்த கார்

மாருதி நிர்வாகம், டீலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்தது. “மாருதி கார் வாங்குவதற்கு விண்ணப்பிக்கும்போது, காருக்காக இரண்டாயிரம் முன்பணம் வசூலித்து அதில் ஆயிரம் ரூபாயை மட்டும் எங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மீதியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று அதில் குறிப்பிடப் பட்டு இருந்தது.

மாருதி கார் விற்பனையாளர்களில் பெரும்பாலானவர்கள் டெபாசிட் தொகையைக் கட்டிவிட்டு, கடன் வாங்கி கார் ஷோ ரூம் அமைத்துவிட்டு, கார் டெலிவரியை எதிர்நோக்கிப் பொறுமையாகக் காத்திருந்தார்கள்.

ஆனால் அவர்களில் ஒரு சிலர், மாருதி நிர்வாகத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கத் துணிந்தார்கள். இந்திரா காந்தியின் ஆட்சியில் அப்போது நெருக்கடி நிலை அமலில் இருந்த காலக்கட்டம். சஞ்சய் காந்தியை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியுமா?

கையில்தான் மிசா சட்டம் இருக்கிறதே! கேள்வி கேட்ட விற்பனையாளர்கள் மீது தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சொல்லி, மிசா உபயத்தில் ஜெயிலுக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதற்கிடையில், கம்பெனி தொடங்கிய உடன் சில மாதங்களில், சஞ்சய் காந்தி ஐரோப்பிய சுற்றுப் பயணம் சென்றார். இது ஒரு முழுமையான பிசினஸ் பயணம் என்று சொல்லப்பட்டது.

மேற்கு ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், செகோஸ்லோவேகியா என்று ஐரோப்பாவின் கார் தயாரிப்பு நாடுகளுக்குப் பயணம் செய்து, கார்த் தொழிற்சாலைகளைப் பார்வையிட்டார் சஞ்சய் காந்தி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!