Home » எனக்கு வேணும் குணுக்கு!
உணவு

எனக்கு வேணும் குணுக்கு!

புசுபுசுவென மாவு பொங்கி, பந்துபோல உருண்டு வந்தால் இட்லி. அதுவே கொஞ்சம் நீர்த்துப் போனால் தோசை. புளித்துப் போனால் அதை ஈடுகட்ட வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு ஊத்தப்பமாகவோ பணியாரமாகவோ ஊற்றிக் கொள்ளலாம். இதுதான் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறை.

இதுவே அடை மாவு மீந்து போனால்? பருப்பெல்லாம் போட்டு அரைப்பதுதான் அடை மாவு. அது புளித்துப் போக வாய்ப்பில்லை. ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருந்தால் ஊசிப் போகும். பருப்பு விற்கிற விலையில் மாவைத் தூக்கிக் கொட்ட முடியுமா? மீந்து போகும் அடை மாவை மடைமாற்றும் தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர் நம் மூதாதையர். குழந்தைகளுக்குச் செல்லப் பெயர் வைப்பது போல அந்தப் பதார்த்தத்தின் பெயர் குணுக்கு.

வீட்டில் யாராவது திடீர் விருந்தாளி வந்தால் அத்தாட்டி இந்த குணுக்கைத்தான் போடுவார். கால் மணிக்குள் தயாரித்து விடலாம். இப்போதெல்லாம் ‘ஐந்து நிமிடத்தில் ஸ்நாக்ஸ் ரெடி’, ‘மூன்று நிமிடங்களில் மூன்று ரெசிப்பீஸ்…’ என விதவித ‘ரீல்’கள்’ உலா வருகின்றன. உள்ளே போய்ப் பார்த்தால் பொடிப்பொடியாக அரிந்த வெங்காயம் ஒரு கப், தக்காளி அரை கப், துருவிய இஞ்சி… என்று ஆரம்பிக்கின்றனர். இதையெல்லாம் நறுக்கி வைக்கவே கால் மணி நேரம் ஆகிவிடாதா?’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!