Home » ஏழாயிரம் கோடி எள்ளு
உலகம்

ஏழாயிரம் கோடி எள்ளு

இருபது வருட இடைவெளிக்குப் பிறகு 2021-ல் தாலிபன் அமைப்பு ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியதை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 1996-லிருந்து 2001 வரை முதன்முறை அதிகாரத்தில் இருந்த போது சாதிக்க முடியாததை எல்லாம் இந்த முறை ஆட்சிக்கு வந்தபிறகு தீவிரமாகச் செயல்படுத்த ஆரம்பித்தார்கள். அக்டோபர் ஒன்றாம் தேதியோடு இந்தியாவில் செயல்படும் ஆப்கானிஸ்தான் தூதரகம் தன் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. “துயரமான, வருத்தமான, ஏமாற்றம் தரும் முடிவு” என்று தூதரக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள தூதரகத்தின் அறிவிப்பு போல மும்பை, ஹைதராபாத் கான்சலேட்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்தத் தூதரகங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி காலத்தில் பதவியமர்த்தப்பட்டவர்கள். தாலிபன்கள் நாட்டைக் கைப்பற்றியதும் நாட்டைவிட்டுத் தப்பியோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் யாருக்கும் தெரியாத வில்லாவில் வசிக்கும் அஷ்ரப் கனி எப்போதாவது பேட்டி கொடுப்பதுடன் தன் கடமையை முடித்துக் கொள்கிறார். ‘ஆப்கன் அதிபரான என்னை அவமானப்படுத்துவதைத் தவிர்க்கத்தான் நான் நாட்டிலிருந்து கிளம்பிவிட்டேன்’ எனக் கூறும் இவர், மேற்கு நாடுகள் தன்னையும் நாட்டையும் கைவிட்டுவிட்டார்கள் என்று குற்றம் சுமத்துகிறார். அதிபரும் அங்கீகரிக்கப்பட்ட அரசும் இல்லையென்றால் ஸ்டேட்லெஸ் மிஷன் என்பதுதான் நடைமுறை. அதிகாரப்பூர்வ நாடற்ற நிலையில் இந்தியாவில் இருக்கும் ஆப்கன் மாணவர்கள், வணிகர்கள், குடும்பங்கள் அனைவருக்கும் கடவுச்சீட்டு, நுழைவுச் சான்று உள்ளிட்ட நடைமுறைகளில் சிக்கல் உண்டானது. சில வாரங்களாகவே தூதரகத் தலைமை அதிகாரியும் பல முக்கிய அதிகாரிகளும் இந்தியாவில் இல்லை. ஐரோப்பிய நாடுகளுக்குத் தஞ்சம் கோரிச் சென்றுவிட்டதாக பேச்சிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!