நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்!
தகவல் தொழில்நுட்பத் துறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல், ‘ஃபார்ம் ஃபேக்டர்.’ வடிவக் காரணி. தொழில்நுட்பம் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவிற்கு மாறும்போது அதன் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கிறது.
தொடக்கத்தில் நாமெல்லாம் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தினோம். ஒரு மேஜையின் மேல் ஜம்மென்று அமர்ந்திருக்கும். தேவையான போது நாம் அதன்முன் உட்கார்ந்து இயக்கினோம். லேப்டாப்கள் வந்தபின், கைக்குழந்தை போலப் போகும் இடமெல்லாம் தூக்கிச் சென்றோம். அதன் பின் ஸ்மார்ட்ஃபோன்கள் வந்தன. ‘எனக்காகப் பாரம் சுமக்காதீர்கள்’ எனத் தொழில்நுட்பம் தன் எடையைக் குறைத்துக்கொண்டது. இது நமக்கு இலகுவானது.
டெக்ஸ்டாப் ஒரு ஃபார்ம் ஃபேக்டர். அது போலவே லேப்டாப்பும், ஸ்மார்ட்ஃபோன்களும். வடிவங்கள் மாறும்போது அவற்றின் பண்பும் பயனும் மெருகேறுகின்றன.
“ஸ்மார்ட்ஃபோனே ஈஸியாத் தான இருக்கு… அதோட நிப்பாட்டிக்கலாமே…?” என்றால் இல்லை. ‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி…’ என்பது போல வடிவங்கள் மாறிக்கொண்டே இருப்பதுதான் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் இயல்பு. கையில் வைத்துப் பயன்படுத்தும் வடிவிலிருந்து, முகத்திலேயே மாட்டிக்கொள்ளும் வடிவிற்கு முன்னேறி இருக்கின்றது தொழில்நுட்பம். இதனால் இன்னமும் நமக்கு நெருக்கமாகியிருக்கிறது.
Add Comment