Home » ஏர் இந்தியாவில் ஏரோப்ளேன் மோட் வேண்டாம்!
இந்தியா

ஏர் இந்தியாவில் ஏரோப்ளேன் மோட் வேண்டாம்!

ஏர் இந்தியா தனது உள்நாட்டுப் பயணிகளுக்கு இன்டெர்னெட் சேவையை இந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. “நீங்கள் யாரும் உங்கள் அலைபேசியை ஆஃப் செய்யவோ, ஏரோப்ளைன் மோடில் போடவோ வேண்டிய அவசியம் இல்லை” என்று அறிவித்துள்ளது . 2025 ஆம் ஆண்டு, ஏர் இந்தியாவிற்கு ஏற்றமான ஆண்டாக ஆரம்பித்திருக்கின்றது.

சர்வதேச விமானங்களில் இணையம் என்பது புதிதில்லை. ஆனால் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு இணையம் என்பது இதுவே முதல் முறை. அதுவும் இலவசமாக என்பதால் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் எப்படி இன்டெர்னட் வசதி கிடைக்கும்? இந்தக் கேள்வி நம்மில் பலருக்கு இருக்கிறது. ஒரு விமானத்தில் இணையம் கிடைக்க வேண்டும் என்றால், சில தொழில் நுட்ப வசதிகள் இருக்க வேண்டும். அதற்குச் சரியான ஆன்டெனாவை பொருத்த வேண்டும். அந்தச் செலவெல்லாம் பல கோடிகளைத் தாண்டும். அப்படிப் பொருத்தப்பட்ட ஆன்டெனா, வானில் பறக்கும் போது தரையில் இருக்கும் டவர் மூலம் இணைய இணைப்பைப் பெற்றுக் கொள்ளும். இதற்கு ஆங்கிலத்தில், air to ground தொழில்நுட்பம் என்று கூறுகிறார்கள். அதுவே கடலுக்கு மேல் பறக்கும் போது டவருக்கு பதில் செயற்கைக்கோள் மூலம் இணையத்திற்கான இணைப்பைப் பெற்றுக் கொள்ளும். இந்த இரண்டு வகைத் தொழில் நுட்பம் மூலம் விமானத்தில் இன்டர்னெட் வசதி கிடைக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!