அண்ணாநகர் டவருக்கு ஒரு சரித்திரச் சிறப்பு உண்டு. சென்னையின் அடையாளங்களுள் அது ஒன்று. கடந்த 2011ம் ஆண்டு அந்த டவரில் ஏற அனுமதி நிறுத்திவைக்கப்பட்டது. டவர் மூடப்பட்டது. காரணம், மேலே ஏறிக் குதித்து தற்கொலை செய்துகொண்டுவிடுகிறார்கள் என்பதுதான். இனி அப்பிரச்னை இல்லை. ஆளுயர இரும்புக்கம்பிகள் போடப்பட்டு பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்டிருக்கின்றன. டவரின் மேலிருந்து கீழ் வரை சரம்சரமாக வண்ண விளக்குகளும், சன்னமான இசைக்கோவை ஒலிக்கும் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. பொதுமக்கள் பார்வைக்கும் பொழுதுபோக்குக்கும் டவர் திறக்கப்பட்டுவிட்டது.
அண்ணா நகரின் உச்சம்
இதைப் படித்தீர்களா?
1 மிதப்பு எக்மோர் ஸ்டேஷனின் பிரதான வாயில் எதிரில் சவாரியை இறக்கிவிட்டுக் கிளம்பப் பார்த்த டிரைவரிடம், இடதுகாலைத் தார் ரோட்டிலும் வலதுகாலைப் பெடலிலும்...
நடிகர் அஜித் கலந்துகொண்ட துபாய் கார் ரேஸ் குறித்து நாம் அறிவோம். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அதே துபாயில் சரித்திர முக்கியத்துவம் கொண்ட வேறொரு சம்பவம்...
சென்னைக்கு ஏன் அந்தப் பெயர் வந்ததென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்(சென்னப்ப நாயக்கர் ஆங்கிலேயருக்கு விற்ற பட்டினம் சென்ன பட்டினம்)
சென்னைப் பகுதியை ஏன் ஆங்கிலேயர் ‘மதராஸ்’ என்றழைத்தார்கள் தெரியுமா?
சென்னப்ப நாயக்கரின் அப்பா முத்துராசு நாயக்கர். ஆங்கிலேயர் பேச்சில் அது மருவி ‘மதராஸ் பட்டினம்’ ஆயிற்று.
தகவல் உபயம்: திரு பாபு(SKB Book shop, Salem).