Home » Archives for முருகு தமிழ் அறிவன் » Page 8

Author - முருகு தமிழ் அறிவன்

Avatar photo

வரலாறு முக்கியம்

பங்கு, பணம், பிரம்மாண்டம்

இப்போதென்றில்லை; கடந்த இருபது முப்பது வருடங்களாகவே, உலகத்தின் பெரும் பணக்காரர் யார் என்றால் ஓரளவு விவரம் தெரிந்தவர்கள் உடனே பில் கேட்ஸைச் சொல்வார்கள். இன்னும் சிறிது கூடுதல் விவரம் தெரிந்தவர்கள் சொல்லும் இன்னொரு பெயர் வாரன் பஃபட். இந்த இரு பெயர்களும் உலகின் பணக்காரர்கள் பட்டியிலில் மாறாமல் சுமார்...

Read More
வரலாறு முக்கியம்

டயட் எப்படி தோன்றியது?

உணவு என்பது தவிர்க்க இயலாதது. உயிர்வாழப் பிறந்த எவரும் உணவில்லாமல் இருக்க முடியாது. ஏனெனில் உடலுக்குத் தேவையான, இயங்குவதற்குத் தேவையான சக்தி உணவில் இருந்தே கிடைக்கிறது. உடல் எப்போதும் வளரவும், இயங்கவும் காரணமான வளர்சிதை மாற்றத்திற்கான சக்தி உடல் ஏற்றுக் கொள்ளும் உணவிலிருந்தே பெறப்படுகிறது...

Read More
வரலாறு முக்கியம்

தெய்வங்கள் எப்படிப் பிறந்தன?

தமிழர் தெய்வம் என்றால், முருகன். நாம் பொதுவாகக் குறிப்பிடுவது இதைத்தான். தமிழர்களுக்கென அறியப்பட்ட சமயங்கள் சிவம், விண்ணவம். குமரனை வழிபடுகின்ற குமரமாகிய கௌமாரம். சாக்தம் எனப்படுகின்ற சக்தியம். பிள்ளையாரை வழிபடுகின்ற காணாபத்யம் என்ற கணபதியம். செயினம் என்ற சமணம். இவை தவிர புத்தம் பிற்காலத்தில்...

Read More
வரலாறு முக்கியம்

தொடர்களில் தொங்கும் தாலி

தமிழ் தொலைக்காட்சித் தொடர்களுக்கு அடிப்படை ஒரு கதாநாயகி, ஒரு திருமணம், ஒரு தாலி. என்னதான் காலம் மாறிவிட்டதாகச் சொன்னாலும் அனைத்துத் தொடர்களின் கதாநாயகிகளும் இன்றும் மஞ்சள் மாறாத குண்டு தாலியுடன் தான் அனைத்துக் காட்சிகளிலும் வந்து போகிறார்கள். தாலிக்கு வேலை இருந்தால் அது சேலைக்கு மேலே...

Read More
வரலாறு முக்கியம்

உன்னைக் கொடு, என்னைத் தருவேன்!

தமிழர்களிடையே வர்த்தகம் முதல் முதலில் எப்படித் தோன்றியிருக்கும் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? நாணயம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், இருப்பதைக் கொடுத்து இல்லாததைப் பெறும் வழக்கம் இதன் தொடக்கம் என்று கொண்டால், அது முதல் இன்றைய பிட் காயின், ப்ளாக் செயின் வரை வர்த்தகம் வளர்ந்த வழி எவ்வளவு...

Read More
வரலாறு முக்கியம்

எல்லைகள் இல்லா உலகம்

காலை விடியும் போது நமது அனைவரின் கைகளில் இருந்தும் திறன்பேசிகள் பிடுங்கப்பட்டு விட்டால் என்ன ஆவோம்? நினைத்தாலே கலவரமாக இருக்கிறது இல்லையா? இதே கதைதான் கைபேசிகளில் இருக்கும் சமூக ஊடகச் செயலிகள் போன்றவற்றை அழித்து விட்டாலும். இவை இந்தளவு முக்கியத்துவம் அடையக் காரணம், அன்றாட வாழ்வில் நமக்கு அவை...

Read More
வரலாறு முக்கியம்

இது கூத்தன் குலம்

கலைகளில் ஈடுபாடு கொண்டு நேரம் மறந்து ஊறித் திளைப்பதில் தமிழனை விஞ்ச ஆள் கிடையாது. இன்று ஓடிடி சீரிஸ்கள் என்றால் நேற்று திரைப்படங்கள். தொலைக்காட்சி. அதற்கு முன் மேடை நாடகங்கள். வானொலி. இன்னும் முன்னால் தெருக் கூத்து. அவரவர் தேர்வு, அவரவர் ரசனைதான். ஆனால் கலையார்வம் இல்லாத தமிழர்கள் அநேகமாகக்...

Read More
வரலாறு முக்கியம்

சிலப்பதிகார இடியாப்பமும் குறுந்தொகை மோர்க் குழம்பும்

அந்த ஓட்டலுக்கு ஒரு வெள்ளைக்காரன் வந்தான். உருளைக்கிழங்கு போண்டா ஒன்றை வாங்கினான். பிய்த்துப் பார்த்தான். அவன் கண்களில் வியப்பு. திரும்ப ஒரு உருளைக்கிழங்கு போண்டா வாங்கினான். அதையும் பிய்த்தான். மறுபடியும் வியப்பு. ஓட்டல்காரனிடம் அவன் கேட்டான்: ‘இந்த போண்டாவுக்குள் உருளைக்கிழங்கு மசால் போனது எப்படி...

Read More
வரலாறு முக்கியம்

ஒரு நாடு, ஒரு கனவு, ஒரு தலைவன்

1960ம் ஆண்டு சிங்கப்பூர் அதிபர் லீ க்வான் யூ, இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவைச் சந்தித்தார். பிறகு நேருவைக் குறித்து மிகவும் வியந்து பாராட்டிப் பதிவு செய்திருக்கிறார். அன்றைக்கு நேருவின் உயரம் அப்படி. உலக அரங்கில் இந்தியாவின் உயரம் அத்தகையது. ஆனால் நேருவாலும் இங்கே சாதிக்க முடியாததை லீ எப்படி...

Read More
வரலாறு முக்கியம்

ஆதீனங்களின் கதை

சமீபத்தில் தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சி சர்ச்சைக்கு உள்ளானது. பிறகு சலசலப்புகள் அடங்கி நிலைமை சீரானது. அரசியல் உள்நுழைந்தால் உண்டாகும் இயல்பான பரபரப்புதான் அது. பாதகமில்லை. ஆனால் ஆதீனங்களும் மடங்களும் எப்போதாவது இப்படி சர்ச்சைக்கு உட்படும்போது மட்டும்தான் பொது மக்கள் கவனத்துக்கு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!