Home » Archives for மெட்ராஸ் பேப்பர்

Author - மெட்ராஸ் பேப்பர்

Avatar photo

நம் குரல்

வேண்டாம் விஷப் பரீட்சை!

நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்திலும் வாஜ்பாயி காலத்திலும் இது நடந்தது. (அப்போது தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை.) ஆனால் அத்தேவை என்பது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க...

Read More
நம் குரல்

சிக்கிக்கொண்டது யார்?

ஜூலை மாதம் ஐந்தாம் தேதி விண்வெளிக்குப் போனார் சுனிதா வில்லியம்ஸ். சக விண்வெளி வீரர் புட்ச் வில்மர் உடன் அவர் கிளம்பியபோது ஒன்பதாவது நாள் பூமி திரும்புவதுதான் திட்டம். ஒன்பது மாதங்கள் இருக்கப்போகிறோம் என்பதை இருவரும் எதிர்பார்க்கவில்லை. சுமார் முப்பதாண்டுகள் விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற...

Read More
நம் குரல்

மொழி அரசியல்

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகளைப் பொய்யர்கள், நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள் என நாடாளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார். பேச்சு வேகத்தில் தெரியாமல் வந்த சொற்கள் அல்ல. ஒருமுறை சொன்னதோடு நிறுத்தாமல் மீண்டும் ஒருமுறை அழுத்திச் சொன்னார். எதிர்ப்பு...

Read More
நம் குரல்

ஊதியத்துக்கு ஏற்ற உழைப்பு

மார்ச் பதினெட்டாம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சட்ட ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் சம்பள உயர்வு, நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் எண்ணிக்கை அதிகரிக்க எனச் சில காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன...

Read More
நம் குரல்

மருந்தாகும் மக்கள் சேவை

மக்களுக்குக் குறைந்த விலையில் ஜெனிரிக் மருந்துகளை விற்பனை செய்யும் முதல்வர் மருந்தகங்களைத் திறந்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் மக்களின் மாதாந்திர செலவில் கணிசமாக மிச்சமாகும். உலகளாவிய மருந்துச் சந்தையில் இந்தியா பதிமூன்று சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இதன் தொடக்கம் 1970ல் அப்போதைய பிரதமர் இந்திரா...

Read More
நம் குரல்

மொழியைக் கொண்டு மோசடி செய்யாதீர்!

மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில் இயங்கும் பிஎம்ஶ்ரீ பள்ளிகள் திட்டத்துக்குத் தமிழ்நாட்டு அரசு உடன்படாத வரை மத்திய அரசு தன் பங்காகத் தரவேண்டிய கல்வி நிதியைத் தராது என்று பேசித் தொடங்கி...

Read More
நம் குரல்

வாழும் வன்ம குடோன்

முன்னாள் ரியல் எஸ்டேட் நிபுணரும் அமெரிக்காவின் புதிய அதிபருமான டொனால்ட் டிரம்ப், பதவி ஏற்ற நாளாக வெளியிட்டு வரும் அதிரடி உத்தரவுகள் அநேகம். தீவிர வலதுசாரி ஆட்சியாளர்தான் சரி என்று முடிவு செய்து அவரை ஆட்சியில் அமர்த்தியிருக்கும் அமெரிக்கர்களும் சரி; கிட்டத்தட்ட அதே மனநிலையில் தமது தலைவர்களைத்...

Read More
நம் குரல்

இல்லைகளின் தொல்லை

மத்திய அரசு தாக்கல் செய்த இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் பன்னிரண்டு லட்சம் வரை ஈட்டும் வருமானத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவர். பலன் பெற்ற ஒரு கோடி மக்கள் மிச்சப்படுத்தும் பணத்தை வைத்து, நிறைய பொருள்கள் வாங்கி சில்லறை விற்பனைச் சந்தையில் வியாபாரம் கூடி...

Read More
நம் குரல்

பரந்தூரில் பலன் யாருக்கு?

ஆயிரம் நாள்களை நோக்கிப் போகும் பரந்தூர் சுற்றுப்பகுதி மக்களின் போராட்டம் நடிகர் விஜய் தலையிட்டதால் சற்றே கூடுதல்  கவனத்தைப் பெற்றுள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிமூன்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராடி வருகின்றனர். வீடுகள், விவசாய நிலங்கள், நீர் நிலைகள் உள்படச்...

Read More
நம் குரல்

அது வேறு வர்க்கம்

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் அந்தப் பதவிக்கு வந்தது அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் தங்கள் நாட்டுக்கும் நல்லது எனப் பல நாட்டு மக்கள் நினைக்கின்றனர். பெரும்பான்மை இந்திய மக்களின் கருத்தும் அதுதான் என்கிறார்கள். சவுதி அரேபியர்களும் ரஷ்யர்களும்கூட இப்படியொரு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!