கூட்டணி குறித்த பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன. சிறிய கட்சிகள் தமது இருப்பைத் தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றன. பெரிய கட்சிகள் பேரம் பேசத் தொடங்கியிருக்கின்றன. சாதிக் கட்சிகளும் சாதிக்க வாய்ப்பில்லாத கட்சிகளும் ஓரிருக்கை சாத்தியங்களை முன்வைத்துக் காய் நகர்த்தத் தொடங்கியிருக்கின்றன. எல்லா கட்சிகளும்...
Author - மெட்ராஸ் பேப்பர்
தேர்தல் காலத்தில் ஆளுங்கட்சி என்ன செய்தாலுமே அது வாக்கு சேகரிப்பு சார்ந்த செயலாகத்தான் விமரிசிக்கப்படும். ஆனால் அதற்காக ஒரு மாநில அரசு தனது பட்ஜெட்டில் சமரசம் செய்துகொள்ள இயலாது. இம்முறை தமிழ்நாடு அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு, எளிய தொழிலாளிகளுக்கு, பெண்களுக்கு, ஓய்வூதியம் பெறும் முதியோருக்குச்...
தமிழ்நாட்டு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது என்பது குழந்தைகளுக்கும் தெரியும். நாளொரு அறிக்கை, பொழுதொரு சொற்பொழிவு என்று ஆளுநர் தம்மாலான அனைத்து விதங்களிலும் தமிழ்நாட்டுப் பெரும்பான்மை மக்கள் விரும்பாத விவகாரங்களைத் தொடர்ந்து பேசி வருவதும் அனைவரும் அறிந்தது. பதிலுக்கு பாரதிய...
கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை திருமலையில் (திருப்பதி) சநாதன தார்மிகக் கருத்தரங்கம் என்ற பெயரில் மூன்று நாள் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜீயர்கள், மடாதிபதிகள், சாதுக்கள் ஏராளமானோர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டார்கள். கருத்தரங்கில் பல்வேறு...
மனிதர்களுக்கு, பொருள்களுக்கு எல்லாம் எப்படிக் காலாவதி தினம் என்ற ஒன்று வருகிறதோ அப்படித்தான் போலிருக்கிறது, பாரம்பரியம் மிக்க இயக்கங்களுக்கும். கட்டுறுதி மிக்க, வலுவும் வீரியமும் உள்ள, மக்களைக் கவர்ந்திழுத்துத் தம் பக்கம் தக்க வைத்துக்கொள்ளும் சாதுர்யம் மிக்கதொரு தலைமை இல்லாமல் காங்கிரஸ் என்னும்...
ஆயிரத்துத்தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டாம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனிய வைத்த இந்த இரண்டு சம்பவங்களுக்கும் மதவெறியே காரணமாக இருந்தது. இரண்டு சம்பவங்களுமே இந்தியாவின்...
டிசம்பர் 6, 1992 அன்று அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இந்துத்துவக் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அங்கே ராமர் கோயில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு வழக்குகள், விவாதங்கள், வாதப் பிரதிவாதங்கள், குண்டு வெடிப்புகள், இழப்புகள், நீதிமன்றத் தீர்ப்பு இன்னபிற. முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு...
நாற்பத்தேழு ஆண்டுகளாகச் சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. பபாசி என்கிற தனியார் அமைப்பு (தென்னிந்திய பதிப்பாளர்கள்-விற்பனையாளர்களின் கூட்டமைப்பு) நடத்தும் இந்தப் புத்தகக் காட்சி, ஆண்டுக்கொரு முறை ஜனவரி மாதத்தில் நடைபெறும். சென்னையின் மிகப்பெரிய கலாசார-பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகக்...
♠ கடுகு இந்தக் கட்டுரையை படித்து முடித்தவுடன் மளமவென்று நகைச்சுவைக் கதை, கட்டுரைகள் எழுதிக் குவிக்கலாம் என்று நீங்கள் எண்ணினால் ஏமாந்துதான் போவீர்கள். காரணம் நகைச்சுவை எழுதுவது சுலபமல்ல. எண்பது சதவிகிதம் எழுத்தாளனுக்கு திறமை இருக்கவேண்டும் இருபது சதவிகிதம்தான் கற்று, கேட்டு, பயின்று, பார்த்து...
♠ ரா.கி.ரங்கராஜன் ‘‘எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டு புரொக்ராமுக்கு போகலாம்’’ என்று யாரோ குரல் கொடுத்ததும் எல்லோரும் சிற்றுண்டிகள் வைக்கப்பட்டு ஸ்டவ்கள் எரிந்து கொண்டிருந்த சூடான மேஜைகளை நோக்கி நகர்ந்தார்கள். நானும்தான். என் நண்பர் செல்வராமன், பாலாம்பிகா ஹாலில் தன் மகளின் நடன அரங்கேற்றம் இருப்பதாக...