தமிழ்நாட்டைச் சேர்ந்த இருபத்தேழு மீனவர்களை மூன்று நாள்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கிறார்கள். பாக் ஜலசந்தி பகுதியில் அவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்தபோது இந்தக் கைதுச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. இதே போலக் கடந்த அக்டோபர் மாதம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு...
Author - மெட்ராஸ் பேப்பர்
சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஒரு தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். கர்நாடகம், தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய காவிரி நீரைத் தர மறுக்கிறது. காவிரி நதி நீர் ஆணையம் முதல் உச்ச நீதி மன்றம் வரை யார் சொன்னாலும் கேட்க மறுக்கும் கர்நாடகத்துக்கு மத்திய அரசு எடுத்துச் சொல்லி, நியாயமாகத் தர வேண்டிய நீரைத் தரச்...
வாச்சாத்தி விவகாரத்தில் முன்னர் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு முன்னால் நடந்ததைச் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும். 1992ம் ஆண்டு அது நடந்தது. சந்தனக் கட்டைகள் பதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி அக்கிராமத்தில் வனத்துறை...
மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் பொன்விழா மாநாட்டுக்குப் பிறகு இந்தப் பக்கத்தில் எழுதிய குறிப்பை மீண்டும் ஒருமுறை படித்துவிடுங்கள். இனியேனும் அக்கட்சி பாரதிய ஜனதாவிடம் மண்டியிட்டுக்கொண்டிராமல் தனித்து இயங்க ஆரம்பிப்பதே அக்கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது என்று சொல்லியிருந்தோம். இன்று அது...
உக்கிரமாக அரசியல் பேசுகிறோம். தீவிரமாக சமூகப் பிரச்னைகளைப் பேசுகிறோம். சாதி, மதம், சநாதனம் அது இதுவென்று ஒவ்வொரு நாளும் விவாதம் செய்ய விதவிதமாக நமக்குப் பேசுபொருள் கிடைத்துவிடுகிறது. எண்ணிப் பார்த்தால், மாபெரும் இடிபாடுகளையும் சிதிலங்களையும் மோசமான கட்டுமானத்தையும் நமது சந்ததிக்கு வழங்கிவிட்டு...
ஒரு நாட்டின் பிரதமர், தம் மக்களின் பக்கம் நிற்க வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பார்க்கவும் நடத்தவும் வேண்டும். எங்கே என்ன சிக்கல் எழுந்தாலும் உடனடி நடவடிக்கைகளுக்கு ஆவன செய்ய வேண்டும். ஆனால் நமது பிரதமர் மணிப்பூருக்குப் போக மறுக்கிறார்...
நம் நாட்டில் சாதியும் மதமும் அரசியலின் துணைக் கருவிகள். சாதாரண மக்களின் ஆவேச உணர்ச்சியை எளிதாகத் தூண்டி, அமைதியைக் குலைப்பதற்கு இவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் நீண்ட நாள்களாக இங்கே உள்ளது. சாதிகளை ஒழிப்போம், மதவெறி இல்லா தேசத்தை உருவாக்குவோம் என்று யாராவது பேசுவார்களேயானால், அதுவும் ஓட்டு அரசியலின்...
ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு (UWW), இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) அங்கீகாரத்தை இடை நிறுத்தம் செய்திருக்கிறது . இந்தியா சார்பாகப் பங்கேற்று வெற்றி பெற்று, மூவர்ணக் கொடியை ஏந்தி வலம் வருவதே விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் கனவு. தங்கள் உடலை வருத்திப் பல வருடங்கள் உழைப்பது அதற்குத்தான்...
விவசாயிகளுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் தமிழக அரசைக் கண்டிக்கிறோம். மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டிக்கத் தவறும் தமிழக அரசைக் கண்டிக்கிறோம். கச்சத்தீவுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழக அரசைக் கண்டிக்கிறோம். பேனா நினைவுச் சின்னத்துக்குக் கண்டிக்கிறோம். மின் கட்டண உயர்வுக்குக்...
வேங்கை வயல் விவகாரம் அளித்த அதிர்ச்சியே இன்னும் நினைவை விட்டு நகராத நிலையில் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் சிலர் சக (பட்டியலின) மாணவனையும் அவனது சகோதரியையும் அரிவாளால் வெட்டியிருக்கும் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. 16-17 வயது இளைஞர்களின் மனத்தில் சாதிய வன்மம் அந்தளவுக்கு ஆழமாக ஊன்றப்பட்டிருப்பதை...