Home » Archives for பா. ராகவன் » Page 12

Author - பா. ராகவன்

Avatar photo

சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 19

19. மாற்று வழி ஜ.ரா. சுந்தரேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட பாக்கியம் ராமசாமி என்கிற நகைச்சுவை எழுத்தாளரை உங்களுக்குத் தெரிந்திருக்கும். படித்திருப்பீர்கள், குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பீர்கள். குமுதம் வார இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரது எழுத்துப் பாணி, அவர் எழுதுவதற்குத் தேர்ந்தெடுத்த...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 18

18. இல்லாத ஒன்றும் இருக்கும் இரண்டும் இந்த உலகில் கடவுளைக்கூடக் கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடினால் பார்த்துவிடலாம். ஆனால் சாமானிய மனிதர்களால் கண்டுபிடிக்கவே முடியாத ஒரு விவகாரம் உண்டு. அதற்கு ஆன்மா அல்லது ஆத்மா என்று பெயர். மனிதன் என்றால் ஜீவாத்மா. கடவுளென்றால் பரமாத்மா. அது இருந்துவிட்டுப் போகட்டும்...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 17

17. அகத்தியரும் சீர்காழி கோவிந்தராஜனும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உரைநடையைப் படிப்பதற்கு நமக்குச் சிரமமாக இருக்கிறது. அன்று புழக்கத்தில் இருந்த பல சொற்களை இன்றைக்கு நாம் அறிய மாட்டோம். கிபி பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரைப் படித்தறியத்...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் -16

16. பாம்பும் பறவையும் இப்போது உண்டா என்று தெரியாது. முன்னொரு காலத்தில் குழந்தைகளுக்குத் தரப்படும் மாத்திரைகளில் இனிப்பு தடவப்பட்டிருக்கும். கடித்தாலும் கசப்பின் அளவு குறைந்து, மருந்து உள்ளே சென்று நோய் நீங்க வேண்டும் என்பதற்காக. அப்படித்தான் மூலாதார உண்மைகளும் தத்துவங்களும் தெரியாமல் போய்விடக்...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 15

15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 14

14. தெய்வமும் தெய்வங்களும் அவனை மனிதனா, தெய்வமா என்று இனம் பிரிப்பதில் மக்களுக்குக் குழப்பம் இருந்தது. கால்களைத் தரையில் ஊன்றி நடக்கக் கூடியவனாகத்தான் இருந்தான். ஆனால் அவனது வல்லமை விண்ணை எட்டுவதாக இருந்தது. இன்னொரு மனிதனால் எண்ணிப் பார்க்க முடியாத செயல்கள் அனைத்தையும் அவன் அநாயாசமாகச் செய்தான்...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 13

13. கத்திரிக்காய் வியாபாரம் அவர்கள், எல்லை என்ற ஒன்றை எண்ணிப் பார்த்ததில்லை. கால்களில் வலு இருந்தவரை நடந்துகொண்டே இருந்தார்கள். மலைகள். காடுகள். பாழ்நிலங்கள். சமவெளிகள். வெயிலுக்கும் மழைக்கும் வேறுபாடு அறியமாட்டார்கள். இருளுக்கும் பகலுக்கும்கூட அவர்களிடம் பேதம் கிடையாது. விலங்குகள், கிழங்குகள்...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 12

12. பசுவும் பதியும் மனித குலத்தின் தொடக்க கால நடவடிக்கைகள், நம்பிக்கைகள், முயற்சிகள், வெற்றி-தோல்விகள் எது ஒன்றனைக் குறித்து அறிய விரும்பினாலும் பண்டைய நாகரிகங்களில் இருந்து ஆரம்பிப்பது சுட்டிக் காட்டுவோருக்குச் சிறிது எளிய செயல். நமக்கு அப்படிச் சிறு வயதுகளிலிருந்தே சுட்டிக்காட்டப்பட்டது, சிந்து...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 11

11. நால்வரும் ஒருவனும் ஆனந்த வடிவம். ஆம். அதைத்தான் பார்த்துக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் அறிவு திறந்துவிட்ட காலத்தில் வசிக்கும் வசதி நமக்கு இருக்கிறது. எதையும் தவறாகவேனும் நாமே யோசித்துக்கொள்ள முடிகிறது. யோசிக்கும் விதம் தவறு என்று உணரக் கால தாமதம் ஆகிவிட்டாலும் பிறகு சரி செய்துகொள்ளவோ, அப்படியே...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 10

10. கடவுளும் கடவுள்களும் கடவுளைக் குறித்து அதிக அளவில் யோசித்த, அதே அளவுக்குப் பேசிய முதல் பிரதி என்று ரிக் வேதத்தைச் சொல்லலாம். கவனிக்க. கடவுளைக் குறித்துத்தான். அவனைக் குறித்தோ அல்லது அதனைக் குறித்தோ அல்ல. ‘அவன்’ என்பது கடவுள்தான் என்று ஒரு வாதத்துக்குக் கொள்வோமானால் ஒரு நபரா, பலரா என்பது முதல்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!