எத்தனை ஆண்டுகள் என்று எண்ணிச் சொல்ல யாருமில்லாக் காலம் தொட்டு அந்தப் பேய் வசித்துக்கொண்டிருந்தது. அது பேய்ப்பிறப்பெடுத்து வாழத் தொடங்கிய காலத்துக்குப் பிறகு வந்த ஒவ்வொரு தலைமுறைப் பேயும் தனது பேய்க்காலத்தை முடித்துக்கொண்டு முக்திக்கோ வேறொரு பிறப்புக்கோ சென்றுகொண்டே இருந்தும் அது மட்டும் பேயாகவே...
Author - பா. ராகவன்
பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே எழுதியிருந்தோம். சங்கதி இன்றைக்கு சந்திக்கு வந்திருக்கிறது. ரகசிய ஆலோசனை என்று முத்திரையிடப்பட்டாலும் இதில் ஒரு புண்ணாக்கு ரகசியமும் இல்லை. மே பன்னிரண்டாம்...
ஆப்கனிஸ்தான், மீண்டும் உலகின் முக்கியப் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. என்ன பெரிய புது விஷயம்? அதே தாலிபன், அதே ஐ.எஸ்.கேதானே என்று தோன்றலாம். இல்லை. இது இன்னும் வீரிய விவகார வினோத ரச மஞ்சரி. நிரந்தரத் தீவிரவாதிகளும் திடீர் ஆட்சியாளர்களுமான தாலிபன் பதவிக்கு வந்தது முதல் தமது முதல் மற்றும் ஒரே...
நல்ல, அருமையான, நிறைய பார்வையாளர்களைக் கொள்ளக்கூடிய பெரிய விளையாட்டு மைதானம். ஆப்கனிஸ்தானின் ஃபரா மாகாணத்தில் உள்ளது. விழா அங்கேதான் ஏற்பாடாகியிருந்தது. அரசாங்கமே நடத்துகிற விழா என்பதால் ஆரவாரம் சிறிது அதிகம். நீதிபதிகள், அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், மாநிலம் முழுதும் உள்ள...
புத்தகம் படிப்பதில் உள்ள பெரிய சிக்கலே, எடுப்பதில் பாதி படிக்க முடியாதபடி இருப்பதுதான். 1. போரடிக்கும் எழுத்து நடை 2. எழுதத் தெரியாமல் எழுதியிருப்பது 3. சப்ஜெக்டுக்கு வராமல் ஊர் உலகமெல்லாம் சுற்றி வளைப்பது 4. நிறுத்தற்குறி வைக்கும் வழக்கமே இல்லாமல், பத்து வரிக்கு ஒரு சொற்றொடரை அமைத்திருப்பது 5...
15. முடியாத யுத்தம் ஐரோப்பியக் கண்டத்தின் மிகப் பெரிய நாடு. இயேசுநாதர் பிறப்பதற்கு முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதக் குடியேற்றம் நிகழ்ந்த பிராந்தியம் என்று தொல்லியல் ஆய்வுகள் சொல்கின்றன. தனிச் சிறப்பு என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை என்பதனாலேயே ஒரு தேசத்தின் எல்லைகளை ஆளுக்குக்...
14. சர்வ நாச பட்டன் அமெரிக்க-ரஷ்ய பனிப்போர் அதன் உச்சத்தை நெருங்கிக்கொண்டிருந்த சமயம். ரஷ்யாவின் அணு ஆயுத சொகுசு சௌகரியங்களைக் கண்காணிப்பதற்கென்று அமெரிக்காவும் அதன் தோழமை (ஐரோப்பிய) தேசங்களும் இணைந்து ஒரு நிழல் உளவுத் துறையையே உருவாக்கிச் செயல்பட வைத்திருந்தன. இது ரெகுலர் உளவுத் துறையல்ல. அணு...
பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குப் பின்னால் நடக்கும் அனைத்தையும் அலசும் கட்டுரை. சென்ற ஆண்டு வரை நான் ஒரு நீட் எதிர்ப்பாளனாக இருந்தேன். தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு முன்வைக்கும் காரணங்கள் எதுவும் எனக்குச் சம்பந்தமில்லாதவை. எனக்கென்று அதற்குச் சில காரணங்கள் இருந்தன. அவை பின்வருமாறு: 1. மருத்துவக்...
13. மன்னன் எவ்வழி ரஷ்ய மக்கள். புதின் எழுதிய உக்ரைன் யுத்தத் திரைக்கதைக்கு க்ளைமேக்ஸ் எழுதும் தகுதி படைத்தவர்கள் அவர்கள்தாம் என்று பார்த்தோம். ஒருமித்த குரலில் அவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து, போருக்கு எதிராக அல்லது புதினுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினால் நூல் அல்லது வால் பிடித்து...
அக்கம்பக்கத்தில் யாருக்காவது அரசியல் ரீதியில் அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அது போரடித்தால் ஒரு கிருமியை உற்பத்தி செய்து உலகெங்கும் அனுப்ப வேண்டும். அதுவும் சலிக்கும்போது யாருக்காவது போர் அச்சுறுத்தல். சீனாவின் சரித்திரத்தைப் புரட்டுங்கள். இந்த வரிசை மாறவே செய்யாது. கொரோனா அலை...