20. எருமை போல் வாழ்வோம் எருமை என்று ஒருவரைத் திட்டும் போது நாம் அவரை இகழ்வாகச் சொல்வதாக நினைக்கிறோம். ஆனாலும் எருமையின் குணாதிசயங்களை அவதானித்துப் பார்த்தால் அவற்றில் பலவும் நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு உதவுபவையாக இருப்பதைக் காணலாம். நாம் இதுவரை பார்த்த நமக்குப் பலன் தரக்கூடிய எருமையின் முக்கியமான...
Author - ந. ஜெயரூபலிங்கம்
19. நிதானம் நிம்மதி கொடுக்கும் எருமைகளின் வாழ்க்கை முறையைக் கவனித்தால் அவை புற்களை மேய்வது, பின்னர் ஓய்வெடுத்துக் கொண்டு அசை போடுவது, தேவைப்படும்போது சேற்றில் புரள்வது என்றுதான் இருக்கும். ஓரிடத்தில் இருந்து உணவையோ, நீரையோ தேடி இன்னும் ஓரிடத்திற்குச் செல்லும் போதும் வேகமாகச் செல்வதில்லை. நிதானமாக...
18. சேற்றில் புரளும் எருமை வாழ்வில் சோர்வு என்பதை அடையாதோர் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். எவ்வளவுதான் மிகவும் விருப்பமான பணியில் இருந்தாலும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்போது சோர்வு ஏற்படுவது இயற்கை. அப்படியான சோர்வு ஏற்படும் நேரங்களில் சிலர் தங்களை வருத்தித் தொடர்ந்து...
17. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற பழமொழிகள் தமிழில் உண்டு. அது மட்டுமல்லாது ஔவையார் ஆத்திசூடியிலும், திருவள்ளுவர் திருக்குறளிலும் ஒற்றுமை பற்றிச் சொல்லியுள்ளனர். ஒற்றுமையால் நன்மை கிடைக்கும் என்பதனை இயற்கையாக வாழ்ந்து காட்டுபவை எருமைகள்...
16. மாற்றம் ஒன்றே மாறாதது சூழலுக்கேற்ப மாற்றங்களைச் செய்து கொள்வது எருமைகளிடம் உள்ள சிறப்புக் குணங்களில் ஒன்றாகும். எருமைகளுக்கு நீர் அத்தியாவசியமானது. அதனால் அவை இயன்றளவு நீர்நிலைகளுக்கு அருகிலேயே வாழ்வதுண்டு. மழைக்காலத்தில் நீரும் புதிதாக வளரும் தாவரங்களும் அதிகமாகக் கிடைக்குமல்லவா. ஆப்பிரிக்கக்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள் அவர்களது பேச்சுக்கு ஏற்ற மாதிரி இருப்பதில்லை. வெறும் வாய்ச்சவடால் மட்டுமே என்பதாகும். தேவையில்லாமல் அதிகம் சத்தம் போடுவதில் நாயுடன் போட்டி போடும்...
14. தன்னம்பிக்கை ஆப்பிரிக்கக் காடுகளில் எருமைகளின் முக்கியமான எதிரி சிங்கங்கள் என்று சொல்லப்படுகிறது. சிங்கங்களைப் பொறுத்தவரை எருமைகள் உணவு. எருமைக் கூட்டத்தைத் தாக்கும்போது பலவீனமான எருமையையோ அல்லது முதிர்ச்சி அடையாத இளம் எருமையையோதான் சிங்கங்கள் குறிவைப்பதுண்டு. ஒரு முழுமையாக வளர்ச்சி அடைந்த...
13. துரோகமும் மன்னிப்பும் பழிக்குப் பழி. இரத்தத்துக்கு இரத்தம். சொல்வதற்கு நன்றாக இருக்கும். சினிமாவில் கதாநாயகன் பழி வாங்குவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நிஜ வாழ்க்கைக்கு எவ்வளவு உதவும்? ஆங்கிலத்தில் இதனை eye for an eye என்று சொல்வார்கள். என் கண்ணைக் குத்தினால் உன் கண்ணைக்...
12. வெற்றியும் தோல்வியும் நீண்ட நாட்களுக்கு முன்னர் இணையத்தில் ஒரு படம் பகிரப்பட்டது. அந்தப் படத்தில் மூன்று சிறுவர்கள் இருந்தனர். பள்ளிக்கூடத்து விளையாட்டு மைதானத்தில் போட்டியில் பரிசு கொடுக்கும் மேடை. அதில் நடுவில் முதலாம் இடத்துத் தளத்தில் நிற்கும் சிறுவன் புன்முறுவலுடன் மகிழ்ச்சியுடன் நின்றான்...
11. சிரித்து வாழ வேண்டும் பெரும் துன்பங்கள் தினமும் நம்மைத் தாக்குவதில்லை. அப்பப்போ வரும். அவற்றிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்பதை முந்தைய அத்தியாயத்தில் ஆராய்ந்தோம். ஆனாலும் நமது அன்றாட வாழ்க்கையில் பெருந்துன்பங்கள் தினசரி வராத போதிலும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம்? அல்லது எவ்வளவு சோகமாக...