பிறந்ததிலிருந்து ஒரு பதவிக்காகத் தயார் செய்யப்பட்டு எழுபத்து மூன்றாவது வயதில் அந்தப் பதவியை அடைவது என்பது உலக சரித்திரத்தில் ஒரு புதுமையான விஷயமே. அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாயகன் பிரிட்டனின் புதிய மன்னர் மூன்றாவது சார்லஸ். நமக்கெல்லாம் இளவரசர் சார்லஸாக இவ்வளவு காலமாக அறிமுகமானவர்...
Author - ந. ஜெயரூபலிங்கம்
செப்டெம்பர் 8, 2022 அன்று ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. பிப்ரவரி 6 1952லிருந்து எழுபது ஆண்டுகள், ஏழு மாதங்கள், மூன்று நாட்கள் பிரிட்டனின் ராணியாகவும், கனடா, அவுஸ்திரேலியா உட்படப் பல பொதுநலவாய நாட்டு (காமன்வெல்த் நாடுகள்) அரசுகளின் தலைவியாகவும் (ஹெட் ஆஃப் த ஸ்டேட்) இருந்த இரண்டாம் எலிசபெத் ராணி...
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சில நண்பர்கள் சந்திக்க ஓராண்டுக்கு முன்னர் திட்டமிட்டோம். கொழும்பில் சில நாட்கள் யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் என்பது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. ஆனாலும் இலங்கையில் ஏப்ரல் மாதத்திலிருந்து ஆரம்பித்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் நாமொன்று நினைக்கத்...
இலங்கை என்றாலே ஏடாகூட அரசியல் விவகாரம்தான் என்றாகிவிட்ட சூழலில், ஒரு மாறுதலுக்கு நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவுக்குச் சென்று வந்த அனுபவத்தை எழுதுகிறார் ஜெயரூபலிங்கம்: நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகப் பிரசித்தி பெற்ற, பழமை வாய்ந்த ஆலயம். இப்போதிருக்கும் கோயிலின் தோற்றம் நான்காம் முறை...
கடந்த வாரம் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் தமது செல்பேசி ஹேக் செய்யப்பட்டிருப்பதாகத் தமக்குச் சந்தேகம் உள்ளதென ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். அதற்கு ஒன்றிரண்டு தினங்கள் முன்னதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. முக்கிய ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் திறன்பேசியை (Smart Phone)...
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கடந்த வாரம் வந்த வெப்ப அலையினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிரிட்டனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜூலை 18, 19 ஆகிய இரு தினங்களும் பிரிட்டனின் வெப்பநிலை மிக அதிகமாக இருந்தது. பிரிட்டன் வரலாற்றில் முதல் தடவையாக வெப்ப நிலை 40°C எல்லையைத் தாண்டியது. இங்கிலாந்தில்...
அடுத்த பிரிட்டிஷ் பிரதமராக வரப் போவது யார்? ஐரோப்பா முழுதும் இன்றைக்கு இதுதான் கேள்வி. போரிஸ் ஜோன்சன் பதவி விலகுவதாக அறிவித்ததும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டி அறிவிக்கப்பட்டது. போட்டியில் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே பங்குபற்றலாம். ஒருவர் போட்டியில்...
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதவி பறிபோயிருக்கிறது. பிரித்தானிய அரசு சந்தித்துக்கொண்டிருக்கும் நெருக்கடியின் பின்னணியை விளக்குகிறது இக்கட்டுரை. இந்த வாரம், பிரித்தானிய அரசியலில் ஒரு முக்கியமான வாரமாகும். 2019 டிசம்பர் மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்றது...
மூன்று தசாப்தங்கள் முடிந்து விட்டன. சிறிது பிரமிப்புத்தான். வட துருவமும் தென் துருவமுமாகவே வாழ்ந்து வந்தாலும் நானும் என் மனையாளும் முப்பது வருடங்கள் பிரியாமல் இருந்திருக்கிறோம் என்பது சாதனைதான். பிரிய வேண்டுமென்ற எண்ணம் ஒரு தடவை கூட மனதில் தோன்றியதில்லை என்பது முக்கியம். அவளுக்கும் அப்படித்தான்...