Home » Archives for ந. ஜெயரூபலிங்கம் » Page 6

Author - ந. ஜெயரூபலிங்கம்

Avatar photo

இன்குபேட்டர்

டிஜிட்டல் வாசனை

வானொலி கேட்கும் போதோ அல்லது தொலைபேசியில் பேசும் போதோ மற்றவர்களின் குரலை நம்மால் கேட்க முடிகிறது. அது மட்டுமல்லாமல் சூழலின் ஒலி வடிவங்களையும் நம்மால் கேட்க முடிகிறது. சினிமா, தொலைக்காட்சி, இணையத்தில் அல்லது நாமே பதிவு செய்த காணொளிகளில் நம்மால் காட்சி வடிவங்களைப் பார்க்க முடிகிறது. அத்துடன்...

Read More
இயற்கை

பெங்குயின் அணிவகுப்பைப் பார்க்கலாமா?

பிலிப் ஐலண்ட் என அழைக்கப்படும் தீவு ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் உள்ளது. இது மெல்பேர்ன் நகரிலிருந்து 125 கிலோமீட்டர்கள் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. தீவான போதிலும் இதனைக் காரில் சென்றடையலாம். இத்தீவினை இணைத்துக் கொள்ள ஒரு பாலம் உள்ளது. இத்தீவில் ஒரு காட்சிக்கான சென்டர் உள்ளது. நாம்...

Read More
இன்குபேட்டர்

செயற்கை இறைச்சி சாகசங்கள்

அசைவ உணவுப் பிரியர்களுக்காக ஆடு, மாடு, பன்றி போன்ற மிருகங்கள்,  கோழி போன்ற பறவைகள் வளர்க்கப்படும் பண்ணைகள் எல்லா நாடுகளிலும் உண்டு. இப்பண்ணைகளின் முக்கிய நோக்கம் அவர்கள் வளர்க்கும் மிருகங்களையும் பறவைகளையும் இறைச்சிக்காக விற்பனை செய்வதே. அண்மைக் காலங்களில் மிருகங்களை உணவுக்காக வளர்த்தாலும் அவற்றை...

Read More
உலகம்

ஹம்சாவுக்குக் கட்டம் சரியில்லை

ஜனநாயக அரசியலின் அடிப்படை பெரும்பான்மை எனும் எண்ணிக்கையே. ஜனாதிபதித் தேர்தலில் இருந்து உள்ளூராட்சித் தேர்தல் வரை ஒருவர் வெற்றி பெறத் தேவையானது பெரும்பான்மையானோரின் வாக்குகள். அதேபோலப் பாராளுமன்றத்திலிருந்து சிறிய கவுன்சில் வரை ஆட்சி அமைப்பதற்குத் தேவை பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு. இந்த...

Read More
இன்குபேட்டர்

மெய்நிகர் ஆடை போதும்!

ஆடைகளை வாங்கும்போது முக்கியமான பிரச்சினை அவை நமக்கு அளவாக இருக்குமா? என்பதே. எந்த ஒரு ஆடையையும் அணிந்து பார்க்காமல் வாங்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. பொதுவாக சைஸ் என்று ஒன்று லேபலில் போட்டிருப்பார்கள். அது அளவுக்கான ஒரு அண்ணளவான வழிகாட்டி மட்டுமே. அதை மட்டுமே நம்பி நமக்குச் சரியாகப்...

Read More
இன்குபேட்டர்

3டி கேக்

முப்பரிமாண அச்சு இயந்திரம் (3D Printer) பற்றி அறிந்திருப்பீர்கள். மூலப்பொருட்களைக் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட அளவில் அடுக்கடுக்காக அச்சிடுவதன் மூலம் முப்பரிமாணத்தில் பொருட்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இது. இது எண்பதுகளின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம். நாற்பது ஆண்டுகளில்...

Read More
இன்குபேட்டர்

பச்சைத் தொழில்நுட்பம்

பச்சை குத்துதல் என்பது பண்டைக் காலத்திலிருந்து பல சமூகங்களில் இருக்கும் ஒரு நடைமுறை. பழங்குடி மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பச்சை குத்திக் கொண்டார்கள் என்பது மனித வரலாற்றில் உள்ளது. தற்காலத்தில் தமது தனித்தன்மையைப் பலரும் பச்சை குத்தி உலகுக்குக் காட்டி மகிழ்வர். இது காதலி, மனைவி, காதலன்...

Read More
இன்குபேட்டர்

மூளையில் ஒரு சிப், முதுகுத் தண்டில் ஒரு சிப்

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அப்பழமொழியின் தமிழ் மொழிபெயர்ப்பு “ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்படவில்லை”. பிரமாண்டமான எதையும் குறுகிய காலத்தில் உருவாக்க முடியாது என்பதே இதன் அர்த்தம். இப்பழமொழி உலகில் உருவாக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தும். இன்று நாம் சர்வ சாதாரணமாகத்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

ரோபோ டீச்சர்

திருவனந்தபுரத்தில் உள்ள KTCT மேல்நிலைப்பள்ளி அண்மையில் ஒரு புதிய ஆசிரியரைப் பணியில் சேர்த்தார்கள். இந்த ஆசிரியரின் பெயர் ஐரிஸ். தென்னிந்தியப் பெண் ஆசிரியர்களைப் போலவே இவரும் சேலை அணிந்து பள்ளிக்கு வருகிறார். இவர் கல்வி கற்பிக்கும் வகுப்புகளில் மாணவர்கள் அதிக உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்களாம்...

Read More
பெண்கள்

எல்லைகளில்லா உலகம்!

தொழில் ரீதியாக அல்லது அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்காகப் பயணிப்பது நாமனைவரும் செய்வதே. அதற்கும் மேலாக அன்றாடத்திலிருந்து விடுபடுவதற்கான பயணங்களும் உண்டு. இவற்றை மேற்கொள்வதற்கு ஆண் பெண் வேறு பாடுகள் உளதா? பெண்கள் இப்படியான பயணங்கள் மூலம் என்ன பயன் அடைகிறார்கள்? இப்பயணங்களை மேற்கொள்ளப் பெண்கள் எதிர்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!