ஒரு ஸ்மார்ட்போனும் இன்டர்நெட் இணைப்பும் மட்டுமே இருந்தால் போதும். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் நடத்தும் பாடங்களை நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கற்க முடியும். பெரும் பொருட்செலவு இல்லாமல். இச்சிறப்பான வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளன டிஜிட்டல் தொலைநிலை வகுப்புகள். இவை “மூக்” (MOOC –...
Author - கே.எஸ். குப்புசாமி
‘போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.’ வானொலி விளம்பரங்களில் இவ்வகை வாக்கியங்கள் மிகவும் பிரபலம். இவற்றின் சோசியல் மீடியா அவதாரம்தான் ‘ப்ளூ டிக்’குகள் (Blue Tick). பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தங்கள் பயனாளர்களுக்கு வழங்கும் அங்கீகாரம் இந்த...
‘பிங்க் சிலிப்’ (Pink Slip) என்றிரு வார்த்தைகள். வாசிக்க அழகாய்த் தான் உள்ளன. ஆனால் அர்த்தம் கொடுமையானது. பிங்க் சிலிப் கொடுப்பது என்றால் ஒருவரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்புவது. நவயுக இளைஞர்களின் மிகப்பெரிய பயம் திடீர் வேலை இழப்பு. சமீபகாலமாக நாம் அடிக்கடி கேள்விப்படும் விஷயங்களில் முக்கியமான...
நமது சராசரி வேலைநேரம் கூடியிருக்கிறது. ஏனெனில் இப்போதெல்லாம் பெரும்பாலான வேலைகள் நேர அளவில் இல்லாமல் பொறுப்பு என்னும் அளவுக்கு மாறியிருக்கின்றன. “இத இன்னைக்குள்ள முடிச்சுடுங்க” என்று உங்கள் பாஸ் சொல்லிவிட்டால் அந்த வேலை முடியும்போது தான் இன்றைய உங்களது வேலைநாள் முடியும் என்று அர்த்தம். பாஸ்...
“எனக்குச் சின்ன வயசா இருந்தப்ப எங்க வீட்டு டீ.விக்கெல்லாம் ரிமோட்டே கெடையாது பாப்பா” என்று எனது பத்து வயது மகளிடம் கூறினேன். அவள் சற்றும் யோசிக்காமல் “ஏம்ப்பா… தொலச்சிட்டியா?” எனக் கேட்டாள். ரிமோட் இல்லாமல்தான் நாம் தொலைக்காட்சிப் பெட்டியை ஒரு காலத்தில் பயன்படுத்தியிருக்கிறோம். அதுசரி…...
சராசரி மனிதருக்குத் தொழில்நுட்பம் கூடுதல் வசதி. மாற்றுத் திறனாளிகளுக்குத் தொழில்நுட்பம் மறுவாழ்வு. தகவல் தொழில்நுட்பம் மாற்றுத் திறனாளிகளின் அன்றாட வாழ்வில் கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள் மகத்தானவை. அடுத்தவரின் கருணையை எதிர்பாராமல் இவர்கள் தற்சார்புடன் வாழத் தகவல் தொழில்நுட்பம் பேருதவி செய்து...
எந்தத் தகவலும் நமக்கு ஒரேயொரு ‘கிளிக்’ தூரத்தில். மனிதகுல வரலாற்றில் இதுபோன்று வசதியுடன் எந்தவொரு தலைமுறையும் வாழ்ந்ததில்லை. தகவல் நுகர்வுகூட ஒருவகையில் கார்போஹைட்ரேட் போலத் தான். இரண்டையும் தேவைக்கு மிக அதிகமாக நுகர்ந்து கொண்டிருக்கின்றோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மீதான நமது மீச்சார்பு...
“உங்களோட விண்டோஸ் ஒரிஜினலா?” இந்தக் கேள்வியை நூறு பேரிடம் கேளுங்கள். நான்கு பேர் ஆம் என்பார்கள். பிற பதில்கள், “தெரியாது”, “அதனால என்ன”, “இல்லை”, “அப்டி ஒண்ணு இருக்கா சார்?”. திருட்டு சி.டி போலத் திருட்டு சாப்ட்வேர்களும் நம்மிடையே பரவலாகியுள்ளன. இதனால் விளையும் பெரும் சிக்கல்களை யாரும் அறிவதில்லை;...
இது இன்டர்நெட் காலம். இன்டர்நெட் இணைப்பின் வேகம்தான் நமது அன்றாடச் சுறுசுறுப்பையே நிர்ணயிக்கிறது. தகவல்களைத் தேட இன்டர்நெட், சேவைகளைப் பெற இன்டர்நெட். இதனால் இன்டர்நெட் மீதான நமது சார்பு சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு...
காணத் திகட்டாத கடல். உலகின் இரண்டாவது பெரிய டேனிஷ் கோட்டை. தமிழின் முதல் அச்சுக்கூடம். அப்பர் மற்றும் சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம். டென்மார்க் நாட்டின் சாயலுள்ள தெருக்கள்… இவையெல்லாம் தமிழ்நாட்டில்தான் உள்ளன என்றால் நம்பத்தான் வேண்டும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தரங்கம்பாடிக்கு...