விளங்க முடியா கவிதை நான் எந்தவொரு உயர் தொழில்நுட்பமும் இரட்டை முகங்களைக் கொண்டது. அதன் ஒரு முகம் எளிமை. மற்றொன்று சிக்கலான அறிவியல் முகம். தொழில்நுட்பத்தின் பயன்பாட்டு எளிமைதான் அதன் பரவலாக்கத்திற்கான முக்கியமான காரணம். உதாரணமாக, ஸ்மார்ட் ஃபோனை எடுத்துக்கொள்வோம். அது எப்படி வேலை செய்கிறது என்று...
Author - கே.எஸ். குப்புசாமி
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்! தகவல் தொழில்நுட்பத் துறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல், ‘ஃபார்ம் ஃபேக்டர்.’ வடிவக் காரணி. தொழில்நுட்பம் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவிற்கு மாறும்போது அதன் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கிறது. தொடக்கத்தில் நாமெல்லாம் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களைப்...
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும். வழமை போலவே...
அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது சிக்கலானது. ஆனாலும் அறிந்து கொள்வது அவசியம். என்ன செய்யலாம்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஏ.ஐ. இன்டெக்ஸ் ரிப்போர்ட். ஸ்டான்ஃபோர்ட்...
நவரத்தினங்களால் ஜொலிக்கும் பேரரசர் அக்பரின் அவை. அங்கிருந்தோரின் செவிகள் அதுவரை ருசித்திராத ஓர் இசை விருந்தை நுகர்ந்து கொண்டிருந்தன. அவர்தம் விழிகள் நிகழவிருக்கும் ஓர் அற்புதத்தை எதிர்நோக்கி. இசையரசர் தான்சேனின் தீப் ராகம், அங்கிருந்த அலங்கார விளக்குகளில் சுடரேற்றிய தருணத்தில் அவர்களெல்லாம்...
‘சிப்’புக்குள் முத்து மின்சாரத்திற்கு முன் – மின்சாரத்திற்குப் பின் என்று மனிதகுல வரலாறை இரண்டாகப் பிரிக்கலாம். மின்சாரம் தொடாத துறைகளே இல்லை. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும். இதன் மூலம் வாழ்வை எளிதாக்கும். ஆனால் மிகச் சில...
ஒன்று ஒன்பது மூன்று பூஜ்ஜியம் பரத்பூர், மதுரா, நூஹ், த்யோகர், ஜம்தாரா, குருக்ராம், அல்வார், பொக்காரோ, கர்மாடண்ட் மற்றும் கிரிதிஹ், இவையாவும் வடஇந்தியச் சுற்றுலாத் தலங்கள் என்றெண்ணி விடாதீர்கள். இந்தியாவெங்கும் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களில் பெரும்பகுதி இந்தப் பத்து இடங்களில் ஏதோ ஒன்றிலிருந்து...
வெள்ளை மாளிகையில் பேய் அந்தப் புதிய வீட்டின் வாசம் இன்னமும் குறையவில்லை. அவ்வீடு பவித்ராவின் கனவு. அவளுக்கென ஒரு வீடு. பார்த்துப் பார்த்துக் கட்டியிருக்கிறாள். வேலைகள் அனைத்தும் முடிய ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. எல்லாமும் முடிந்து இங்கு வந்து பத்து நாள்கள் ஆகின்றன. தெருமுனையில் இருந்து பார்த்தால்கூட...
நீரின்றி அமையாது உலகு அரங்கம் நிறைந்திருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்தான் திவாகர். இன்னும் சில நிமிடங்களில் அவனைப் பேச அழைத்துவிடுவார்கள். மடியில் அவனது லேப்டாப். தனது ப்ரசன்டேஷனை மீண்டுமொருமுறை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தான் திவாகர். எல்லாமும் சரியாக இருப்பதாகத்தான் தோன்றியது. கண்களை...
கைமாறிய சிம்மாசனம் அன்றிரவு மழை வேகமெடுத்திருந்தது. மூடியிருந்த கண்ணாடி ஜன்னலில் மோதி, மழை எழுப்பிய இரைச்சல் சாதனாவை உறங்கவிடவில்லை. அம்மழையோசை அவள் மனதோசையின் எதிரொலியைப் போன்றிருந்தது. அவ்விரவுப் பொழுது நீண்டதாக இருக்குமெனச் சாதனாவிற்குத் தோன்றியது. சாதனாவிற்குப் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனமொன்றில்...