“க்ளவுட்” என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகிவிட்டது. ஆரம்பத்தில் சில முக்கியமான ஃபைல்களை மட்டும் க்ளவ்டில் ஏற்றி வந்தோம். க்ளவுட்காரர்கள் கொடுத்த சொற்ப ‘ஜி.பி.’களே போதுமானதாக இருந்தது. ஆனால் இந்தச் சொகுசுக்குப் பழகிப்போன நாம், ‘எதுக்கும் இருக்கட்டுமே…’ என்று எல்லாவற்றையுமே க்ளவ்டில்...
Author - கே.எஸ். குப்புசாமி
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ஜெனரேட்டிவ் ஏ.ஐ. அறிமுகமான போது, பலரும் “இது தேறாது…” என்றே தீர்ப்பெழுதினர். ஆனால் மிகச்சில மாதங்களுக்குள்ளாகவே நிலைமை பெருமளவு மாறியுள்ளது. இன்றைக்கெல்லாம் ஏ.ஐ. மூலம் படம் வரைவது இயல்பாகியிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பத்திரிகைகள் வரை...
தேடிக் கிடைப்பதில்லை எனத் தெரிந்த ஒரு பொருளை… “கட்டிங் எட்ஜ்” என்றொரு ஆங்கிலச் சொல். அதிநவீனத் தொழில்நுட்பங்களைச் சுட்டப் பயன்படும் ஒரு சொல். அனுதினமும் மும்முரமாய் வளர்ந்து கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தின் அன்றலர்ந்த மலர் தான் ‘கட்டிங் எட்ஜ்’. ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது வளர்ந்து வரும் வேகத்தில்...
நெஞ்சம் மறப்பதில்லை ‘கோபைலட்’ இதுதான் இந்த வாரம் ஏ.ஐ. வட்டாரங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொல். காரணம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘பில்ட்’ (Build) என்னும் நிகழ்வு. கூகுளின் ஐ.ஓ போலவே இதுவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த ஆண்டிற்கான பில்ட் நிகழ்வில் மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள ஏ.ஐ...
போகப் போகத் தெரியும் இது ஏ.ஐ/ திருவிழாக் காலம். சென்ற வாரத்தில் வெளியான ஏ.ஐ. அறிவிப்புகள் மட்டுமே, ஒரு தனிப் புத்தகம் எழுதுமளவுக்கு உள்ளன. இந்த ஏ.ஐ. விழாக் குழுவின் முக்கிய அங்கத்தினர்கள் ஓப்பன் ஏ.ஐ.யும், கூகுளும். இரண்டு நிறுவனங்களும் சில வியக்கத்தக்க ஏ.ஐ. அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. கடந்தசில...
விளங்க முடியா கவிதை நான் எந்தவொரு உயர் தொழில்நுட்பமும் இரட்டை முகங்களைக் கொண்டது. அதன் ஒரு முகம் எளிமை. மற்றொன்று சிக்கலான அறிவியல் முகம். தொழில்நுட்பத்தின் பயன்பாட்டு எளிமைதான் அதன் பரவலாக்கத்திற்கான முக்கியமான காரணம். உதாரணமாக, ஸ்மார்ட் ஃபோனை எடுத்துக்கொள்வோம். அது எப்படி வேலை செய்கிறது என்று...
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்! தகவல் தொழில்நுட்பத் துறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல், ‘ஃபார்ம் ஃபேக்டர்.’ வடிவக் காரணி. தொழில்நுட்பம் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவிற்கு மாறும்போது அதன் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கிறது. தொடக்கத்தில் நாமெல்லாம் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களைப்...
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும். வழமை போலவே...
அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது சிக்கலானது. ஆனாலும் அறிந்து கொள்வது அவசியம். என்ன செய்யலாம்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஏ.ஐ. இன்டெக்ஸ் ரிப்போர்ட். ஸ்டான்ஃபோர்ட்...
நவரத்தினங்களால் ஜொலிக்கும் பேரரசர் அக்பரின் அவை. அங்கிருந்தோரின் செவிகள் அதுவரை ருசித்திராத ஓர் இசை விருந்தை நுகர்ந்து கொண்டிருந்தன. அவர்தம் விழிகள் நிகழவிருக்கும் ஓர் அற்புதத்தை எதிர்நோக்கி. இசையரசர் தான்சேனின் தீப் ராகம், அங்கிருந்த அலங்கார விளக்குகளில் சுடரேற்றிய தருணத்தில் அவர்களெல்லாம்...