கனிமரமாக இருங்கள்! குணசேகரனின் ஆட்டோவில் எப்போதும் ரஜினி பாட்டுத்தான். ஆட்டோவின் பின்புறத்தில் ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்று பெரிதாக எழுதி வைத்திருந்தான். ஆட்டோ ஸ்டாண்டில் அவனை ‘ரஜினி குணா’ என்றுதான் எல்லோருக்கும் தெரியும். அண்ணாமலை படம் வந்தபோது இருந்த ரஜினியின் ஹேர் ஸ்டைல்தான் குணாவிற்கும்...
Author - கே.எஸ். குப்புசாமி
சோற்றுக் கடன் “மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல… அல்ல…” சத்தமாகப் பாடியபடி உள்ளங்கையில் செல்ஃபோனை வைத்துத் தாலாட்டுவது போலச் சைகை செய்தான் இளங்கோ. அவனது காதலும் தேடலும் அறுசுவை உணவு. அவனொரு ஃபூடீ. அன்னவெறி கன்னையன். சில நிமிடங்களுக்கு முன்பு ஆன்லைனில் அதிரசம் ஆர்டர் செய்திருந்தான் இளங்கோ...
நட்சத்திரத்திற்குப் பின் நாநூற்றொன்று அருணாவின் ஃபோன் மௌன விரதம். இரண்டு நாள்களாயிற்று…. அவளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஒரு மிஸ்டு கால்கூட இல்லை. இவ்வாறிருப்பதையே அவள் கவனிக்கவில்லை. அருணா அப்படித்தான். டாக்டருக்காகக் காத்திருந்தாள். அந்த க்ளீனிக்கின் வெயிட்டிங் ஹாலில் அவள் மட்டுமே...
காதால் கேட்பதும் பொய் “இது எப்டிடா உனக்குப் புரியுது? இவ்ளவு ஃபாஸ்ட்டா பேசுது…” முருகானந்தத்தின் காதுகளில் இருந்த ஹெட்போனைத் தன் காதுகளுக்கு மாற்றிச் சிலவிநாடிகள் கேட்டபின் ஆண்டனிக்கு இந்தச் சந்தேகம் வந்தது. இருவரும் எம்.ஏ. சோஷியாலஜி முதலாண்டு மாணவர்கள். முருகானந்தம் இருக்குமிடம் எப்போதும்...
விஷத்தினும் கொடியது பயம்! கீதா மட்டும்தான் அந்த நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கினாள். வெறிச்சென்றிருந்தது. அங்கிருந்து பத்துநிமிட நடையில் அவளது வீடு. எப்போதும் எட்டு மணியாகிவிடும். ஆனால் இன்றைக்கு ஐந்தரை மணிக்கே வந்துவிட்டாள். மாலை வெயிலைப் பார்ப்பதே அவளுக்குப் புதிதாக இருந்தது. தனியார்...
சாஃப்ட்வேர் குட்டிச்சாத்தான் ஊர் சுற்றுவது என்றால் ஜெயபாலுக்குக் கொஞ்சமும் பிடிக்காது. எங்கெங்கோ பயணங்கள் போய் இன்ஸ்டாவிலும் ஃபேஸ்புக்கிலும் ரீல்கள் போடுபவர்களைப் பார்க்கும்போது அவருக்கு ஆச்சரியமாக இருக்கும்- எரிச்சலாகவும். தவிர்க்கவே இயலாது என்றால் மட்டுமே ஜெயபால் பயணம் செய்வார். வீட்டைவிடச்...
அத்தனைக்கும் ஆசைப்படாதீர்கள் “ஹலோ… ஹலோ… கேக்குதுங்களா…” என்றவாறே அவசர அவசரமாய் வீட்டை விட்டு வெளியே வந்தார் ரகுநாதன். எப்போது ஃபோன் வந்தாலும் இதே ஓட்டம்தான். அவர் வீட்டிற்குள் மொபைல் சிக்னல்கள், “வரும்… ஆனால் வராது…” என்று கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தன. ரப்பர் ஸ்டாம்ப்கள் செய்து கொடுக்கும்...
நட்சத்திரப் பொய்கள் “உன் நல்லதுக்குத்தான்டா சொல்றேன்…” இப்படி யார் சொன்னாலும் இஸ்மாயிலுக்குப் பிடிக்காது. அவனுக்குப் பிடித்ததை மட்டும்தான் செய்வான். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. அவன் வயது அப்படி. இந்த வருடம் பி.காம் படிப்பு முடிகிறது. வழக்கம்போல் இன்றும் அப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டான். தன்...
ஆறுமுகத்தைப் போலவே அவரது காருக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. ஆர்த்தோ டாக்டர் ஆறுமுகம் என்றால் தேனி சுற்றுவட்டாரத்தில் அறியாதவர்களே இல்லை. பிரபல எலும்பு மருத்துவர். அவரது ஊர் வீரம் விளைந்த மண்ணாக இருந்ததால் எப்போதும் அவர் பிஸியாகவே இருந்தார். அவரைவிட அவரது கார் பிரபலம். ‘அம்பாசிடர் ஆறுமுகம்’...
அன்பென்னும் பலவீனம்! தன் அறையின் ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்திருந்தாள் ஆஷா. வெளியே நிலவில்லா இருண்ட வானம். இலைகள் அசையும் அளவுக்குக்கூடக் காற்றோட்டமில்லை. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாகப் புழுங்கியது ஹைதராபாத். அதிலும் பஞ்சாபியான ஆஷாவுக்கு இந்த வெம்மை உறக்கமில்லா இரவுகளைப் பரிசாகத் தந்தது...