இன்று மனித ஆற்றலை நகல் எடுக்க ஏ.ஐ வந்துவிட்டது. நகலெடுப்பதை எல்லாம் கடந்து அதி புத்திசாலியாக உருமாறி வரும் ஏ.ஐ. சிலருக்குத் தலைவலியாகவே தெரிகிறது. காரணம்… அனைவரது வேலையையும் இது விழுங்கிவிடும் என்று பயம். இருப்பினும் இது எந்தெந்த விதத்திலெல்லாம் மனித குலத்திற்குப் பயன்படும் என்பதைக் குறித்தான...
Author - நஸீமா ரஸாக்
துபாய் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சதுப்பு நிலமாக இருந்தது. பின் மீன் பிடி கிராமமாக மாறியது. காய்ந்த வெயிலையும் மணலையும் சும்மா விட்டு வைக்காமல் சுற்றுலாத் தலமாக மாற்றினார்கள் ஷேக்மார்கள். இருப்பதை வைத்து எல்லா விஷயத்திலும் உச்சம் தொடுவதில் ஐக்கிய அமீரக அரசர்கள் கில்லாடிகள். பாலைவனமும் கடலும்...
கோவிட் என்றொரு தொற்று வந்து உலகையே அச்சுறுத்திச் சென்றதை நாமனைவரும் ஒரு கெட்ட கனவாக எண்ணிக் கடந்துவிட்டோம். சகஜமான வாழ்க்கைக்குத் திரும்பி ஆண்டுகள் சில ஆகிவிட்டன. “எல்லாம் இப்படியே போக வேண்டும் என்றால் எங்கள் பேச்சைக் கேளுங்கள்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரேயஸ் கூறியுள்ளார்...
பொதுவாக முஸ்லிம் நாடுகளில் பெண்களுக்கு மரியாதை இருக்காது, பெண்ணுரிமை, சமத்துவமெல்லாம் பேச முடியாது என்றொரு கருத்து உண்டு. துபாய் முஸ்லிம் நாடுதான். இங்குள்ள பெண்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஓர் எளிய வழி இருக்கிறது. பெண்கள் மியூசியம். என்றால், பெண்களை மியூசியத்தில் வைத்துவிட்டார்களோ என்று நினைக்க...
பொதுவாகச் சுற்றுலா சென்றோமென்றால் பின்னாளில் நினைத்து மகிழ ஆயிரம் நினைவுகள் சேகரமாகும். எனக்கு துருக்கிப் பயணம் அப்படித்தான் அமைந்தது. நகரத்தின் பழமை கண்களுக்கும் மனத்துக்கும் நிறைவைத் தந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன் டமாஸ்கஸைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த உதுமானியர்கள்தான் அதற்குக் காரணம்...
நிறவெறிக்குப் பெயர் பெற்ற தென்னாப்பிரிக்காவில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்கிற மக்கள் தங்களுக்கான வீடு கேட்டு அரசாங்கத்துக்கு மனுச் செய்து முப்பதாண்டுகள் கடந்தும் இன்னும் கிடைக்கப் பெறாமல் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காரணம்… நிறவெறிச் சட்டம். இதற்கெல்லாம் சட்டமா? ஆம். தென்னாப்பிரிக்கா...
பாபிலோனின் பழைய தொங்கும் தோட்டங்கள், சுல்தான் நெபுகாத் நெசர் வகையறாக்களைச் சிறிது நினைவுகூர்ந்து, நகர்த்தி வையுங்கள். உலகம் உருண்டை. காலம் உருண்டை. மீண்டும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன, பாலைவனத் தொங்கும் தோட்டங்கள். ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் ஏழு எமிரேட்டில் ஷார்ஜா ஒன்று. ஷார்ஜாவிலிருந்து...
ரமலான் மாதம் ஆரம்பித்தவுடன், இரவுச் சிறப்புத் தொழுகைக்குப் பள்ளிவாசல் நோக்கி சாரை சாரையாக இஸ்லாமியர்கள் செல்கிறார்கள். ஐந்து வேளைத் தொழுகையோடு இந்தச் சிறப்புத் தொழுகையான ‘தராவீஹ்’ ரமலான் மாதம் முழுக்க இரவுகளில் அனைத்து மசூதிகளிலும் நடக்கும். ஆனால் பாலஸ்தீனத்தில் இருக்கும் அல்-அக்ஸா மசூதியில்...
கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்திருந்தது. கொண்டாடிக்கொண்டே இருக்க முடியாது. கண்மூடித் திறப்பதற்குள் பன்னிரண்டாம் வகுப்புக்குப் போய்விட வேண்டியிருக்கும். சீருடை அணிந்து தயாரானாள் திவ்யா. கண்களில் மை சற்றுக் கூடுதல்தான். ஜடை போட வேண்டும் என்ற கட்டாயம் அவள் பள்ளியில் இல்லை என்பதால் குதிரைவால் போட்டுக்...
ஒரு தேர்தல் எப்படி நடக்கக் கூடாதோ, கன கச்சிதமாக அப்படியே பாகிஸ்தானில் நடந்து முடிந்தது. பிப்ரவரி 8 அன்று தேர்தல். அதற்கு முதல் நாள் இரண்டு இடங்களில் கலவரம். சுமார ஐம்பது பேர் உயிரிழந்தார்கள். எனவே நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. லட்சக் கணக்கான இராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில்...