பாகிஸ்தானில் இம்ரான் கானுக்குப் போதாத காலம் எப்போதோ ஆரம்பமாகிவிட்டது. இப்போது நடப்பது, போதவே போதாத காலம். கட்டக்கடைசியாக அவர் செய்துகொண்ட மூன்றாவது திருமணம் இப்போது அவர் கழுத்தைப் பிடிக்கிறது. இஸ்லாமிய விதிமுறைகளை மீறி நடந்த திருமணம் என்பது குற்றச்சாட்டு. அதுசரி. ஒழித்துக்கட்டிவிடுவது என்று முடிவு...
Author - நஸீமா ரஸாக்
கடந்த ஜனவரி பதினெட்டாம் தேதி இரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் என்ற செய்தி வந்து, நாமெல்லாம் சிறிது வியப்புடன் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தோம். பொதுவாகப் பாகிஸ்தான் தாக்குவதென்றால் நம் பக்கம்தானே திரும்பும், இதென்ன புதிதாக இரானுடன் மோதுகிறது என்று வியந்தோம். வியப்புக்கு இன்னொரு காரணம், இப்போது...
2023, என் வருடம் என்று நிறைவாக என்னால் சொல்ல முடியும். இப்படி நான் திடமாகச் சொல்ல எனக்கு வழிகாட்டிய என் ஆசிரியர் பா ராகவனின் பங்கு அளப்பரியது. 2022-ஆம் ஆண்டு தளிர், சூஃபி ஆகும் கலை வெளியீடு முடிந்த கையோடு அடுத்த ஆண்டுக்கான திட்டமிடலை ஆரம்பித்து விட்டேன் என்றால் நம்புவீர்களா..? 2023-ஆம் ஆண்டுக்காக...
துபாய் என்றதும் ஆயிரெத்தெட்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். பிரமாண்டமான கட்டடங்கள் கொண்ட ஷேக் ஜாயித் சாலையைக் கடக்காமல் துபாயை யாரும் தரிசித்திருக்க முடியாது. பதினான்கு வழிச் சாலையில் எப்போதும் வாகன நெரிசல் இருக்கும். ஆனால் சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்தச் சாலையில் ஆரஞ்சு நிறத்தில் மக்கள் வெள்ளம்போல்...
ஷார்ஜாவின் நாற்பத்திரண்டாவது சர்வதேச புத்தகக் காட்சி நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளது. பன்னிரண்டு நாள்கள் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வை ஷார்ஜாவின் அரசர் ஷேக் சுல்தான் அல் காஸ்மி திறந்து வைத்தார். 1982-ஆம் ஆண்டு தொடங்கிய புத்தக காட்சியைப் பார்த்திருந்த அன்றைய பள்ளி மாணவனான ஒருவரிடம் பேசினோம்...
இப்படியொரு நிலைமை தனக்கு உண்டாகும் என்று சலாஹுதீன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆயுதமேந்தியவர். ஆள் பேரைச் சொன்னால் அண்டை அயலில் அத்தனை பேரும் அலறுவார்கள். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் நடத்திய அத்தனைத் தாக்குதல்களுக்கும் பின்னால் மூளையாக நின்று செயல்பட்ட, அந்த அமைப்பின் நிகரற்ற தலைவர். உலகறிந்த...
ஆப்கனிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்தது முதல் இப்பொழுதுவரை எதையும் உருப்படியாகச் செய்யவில்லை. முடிந்தவரை பெண்களுக்கு எதிராகச் சாத்தியமுள்ள அனைத்து தடைகளையும் நெருக்கடிகளையும் உருவாக்கிவிட்டார்கள். இந்த நாட்டில் பெண்ணாகப் பிறந்தது பாவம் என்பதுவரை மக்கள் நினைத்து வருந்திவிட்டார்கள். இனி புதிதாகச்...
சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அலைவோருக்காக அமைக்கப்படுவது, அகதி முகாம். இது உலகெங்கும் உண்டு. பல்வேறு நாடுகள். பல்வேறு காரணங்கள். பல்லாண்டு காலமாக உள்நாட்டுப் போரில் சிதறிச் சின்னாபின்னமாகிக் கிடக்கும் சிரியாவில் இல்லாதிருக்குமா? உண்டு. என்ன ஒரு வித்தியாசம் என்றால் சிரியாவின் வடக்கு எல்லையோரம்...
மார்ச் மாதம் சவூதியைச் சேர்ந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளரான ரெய்யனா பர்னாவி என்னும் பெண், விண்வெளிக்குச் சென்றார். அது அல்ல செய்தி. 1967 ஆம் ஆண்டு உலகத்துக்கே முன்னோடியாக ரஷ்ய நாட்டுப் பெண் வேலண்டினா விண்வெளிக்குச் சென்றார். அதற்குப் பின் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகள் கழித்து இப்போது பர்னாவி...
எப்போதும் கொலைகள். எப்போதும் குண்டு வீச்சு. நிலமெல்லாம் காலம் காலமாகக் காயாத ரத்தம். சொல்ல முடியாத வலிகள், வேதனைகள். நாளை விடியுமா என்பது முதல் கவலை. விடியும்போது நாம் இருப்போமா என்பது நிரந்தரக் கவலை. நாம் கன்னி ராசிக்குப் பலன் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவர்கள் கண்ணி வெடிகளை...