பதவியை விட்டு வெளியே போகும் ஒரு பிரதமர் அல்லது அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைப்பது உலக ஒழுக்கம். இங்கே அங்கே என்ற பாகுபாடின்றி எங்கும் நடப்பது; எப்போதும் உள்ளது. பாகிஸ்தான் ஒரு தனித்துவம் மிக்க தேசம் என்பதால் சும்மா குற்றம் சாட்டிக்கொண்டிராமல், முதற்கண் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள். அதன்...
Author - நஸீமா ரஸாக்
கறுப்பர்களுக்கு எதிரான ஆங்கிலேய அடக்குமுறை பற்றி சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும். ஆப்பிரிக்காவை ஒரு காலத்தில் கூறு போட்டு ஆண்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தத்தம் பங்குக்கு முத்திரை பதிக்காது சென்றதில்லை. ஆனால் ஆப்பிரிக்கர்களுக்கே நிறவெறி இருக்குமா என்றால், இருக்கும்; இருக்கிறது. வடக்கு...
ஆடம்பரமும் பிரமிப்பும் சூழ்ந்த துபாயில், பழமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வரும் எளிமையான இடம் ஒன்று இருக்கிறது. வெளியே அதிகம் தெரியாத, ஆனால் அவசியம் பார்க்க வேண்டிய இடம் அது. துபாயின் அழகிய பக்கத்தைக் கண்டறிய சிறந்த இடம் ‘அல் பஸ்தகியா’ சுற்றுப்புறமாகும். இது அல் ஃபாஹிதி வரலாற்று பக்கம்...
நம் அனைவருக்கும் அரபுப் பெண்களைப் பற்றி ஓர் அபிப்ராயம் உண்டு. அவர்களுக்குக் கல்வி கிடைப்பதில்லை. விரைவில் திருமணம் நடந்துவிடும். அடிப்படைவாதத்தால் அவர்கள் அடக்கி வைக்கப்படுகிறார்கள். உண்மையில் அப்படித்தான் அவர்கள் இருக்கிறார்களா ? நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அரேபியப் பெண்கள் எல்லாம் ஒன்றா ...
அபுதாபியில் இருக்கும் சாதியத் (Saddiyat) தீவில் ஓர் அதிசயம் நடந்திருக்கிறது. அது ஒரு வீடு. சரி, பங்களா என்றே வைத்துக்கொள்ளுங்கள். அதிலென்ன அதிசயம்?என்றால், இருக்கிறது. இது மத்தியக் கிழக்கின் முதன்மையான மூன்று மதங்களின் அடிப்படை இறையாண்மையை போதித்த ஆபிரகாம் பெயரில் கட்டப்பட்டுள்ள புனித வீடு. இந்த...
தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள மக்கள் உறைபனியினாலும் கடும் குளிரினாலும் தூக்கத்தைத் தொலைத்துப் பல மாதங்கள் இருக்கும். வீடு உள்ளவர்களுக்கு இந்த நிலை என்றால், போரில் அலைக்கழியும் மக்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம். ‘இதெல்லாம் விஷயமே இல்லை’ என்று சொல்வது போல, சென்ற திங்கட்கிழமை காலை 4:17...
அல் அக்ஸாவில் இஸ்ரேலிய ராணுவம். அல் அக்ஸாவில் துப்பாக்கிச் சூடு. அல் அக்ஸாவில் கலவரம். இத்தனை பேர் சாவு. இத்தனை பேர் படுகாயம். நேற்று வரை மாதம் ஒருமுறை மேற்படி ஐந்து செய்திகளில் ஏதேனும் ஒன்று நிச்சயம் வந்துவிடும் என்பதே நிலைமை. இப்போது இஸ்ரேலின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சரும் உலகறிந்த அந்த ஊர்...
சென்ற இதழில் ‘குரங்கு கையில் ஏகே47’ என்கிற கட்டுரையைப் படித்திருப்பீர்கள். இந்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. இஸ்ரேல் படைகள் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுட்டு விளையாடுவதற்குத்தான் ரோந்துக்குச் செல்கிறார்கள் என்று நினைக்கும் அளவிற்குத் தாக்குதல்கள் வரைமுறையின்றி நடந்து கொண்டுள்ளன...
பென்கிவிர் வருகையால் இஸ்ரேலில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பாலஸ்தீன மக்கள் இனித் தங்களுக்கு விடிவுகாலமே வரப் போவதில்லை என்று துவண்டு போயிருக்கிறார்கள். ‘யார் அந்த பென்கிவிர்?’ என்றொரு கேள்வி உங்கள் மனத்தில் இந்நேரம் எழுந்திருக்கும். அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், வேறொன்றை – இது...
உங்களுக்கு மஹ்சா அமினியை நினைவிருக்கிறதுதானே..? சில மாதங்களுக்கு முன் இருபத்திரண்டு வயதான, குர்திஷ் இனத்தைச் சேர்ந்த பெண் மஹ்சா அமினி, அறநெறிப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமினி, உயிரற்றவராகத்தான் வீட்டுக்குத் திரும்பினார். அதைத் தொடர்ந்து, அங்கும் இங்கும் பல போராட்டங்கள்...