துபாயின் புத்தம் புதிய முகம்மது பின் ராஷித் நூலகம் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பிரம்மாண்டமான அக்கலைக் கோயிலுக்கு ஒரு நேரடி விசிட். எக்ஸ்போ 2022 அளித்த வியப்பில் இருந்து மீள்வதற்குள் துபாய் இன்னொரு இன்ப அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. முகம்மது பின் ராஷித் நூலகம். நூலகம் எப்படி அதிசயமாகும்? என்றால்...
Author - நஸீமா ரஸாக்
“அம்மா, இன்னைக்கு எங்க ஸ்கூல்ல பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் வேப்பிங் பண்ணதா கம்பளைண்ட் வந்து இருக்கு” என்றாள் மகள். ‘அப்படின்னா?’ சட்டென்று கேட்க தைரியம் இல்லை. நாம் ஒன்று கேட்க மகள் எதிர்பார்க்காத அளவில் பெரிதாக எதையாவது சொல்லிவிட்டால்? அந்தத் தயக்கம்தான் காரணம். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்...
அரபிகளின் காலை உணவு எப்படி இருக்கும் என்று ருசித்து அறிய மைனா ஆசைப்பட்டாள். ஏனெனில், அரபி என்ற ஒரு குடையின் கீழே பல மத்தியக் கிழக்கு நாடுகளின் உணவு வழக்கம் வந்துவிடுமல்லவா? லெபனீஸ் உணவு, எகிப்து உணவு, டர்கிஷ் உணவு என்று இவற்றுக்குப் பெயர்தான் வேறே ஒழிய அடிப்படையில் ஒன்றுக்குள் மற்றொன்றுதான்...
போலி ஏஜன்சிகளிடம் ஏமாந்து வருபவர்கள், கள்ள பாஸ்போர்ட்டில் சிக்குபவர்கள், குருவியாக அகப்பட்டவர்கள் – மாட்டினால் இவர்கள் அனைவருக்கும் துபாயில் சிறைதான் கதி. பிறகு மீட்டெடுப்பது சாதாரண காரியமல்ல. இரண்டு அரசாங்கங்களும் பேசி, ஆவணப் பரிவர்த்தனைகள் செய்து, நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதற்கு ஆயிரம்...
வடிவேலு மூலம் பிரபலமான இடம். இன்று வரை தமிழ் கூறும் நல்லுலகம் இதை ஒரு கற்பனைச் சந்தாகவே எண்ணிக்கொண்டிருக்கிறது. இல்லை. உண்மையிலேயே துபாய் குறுக்குச் சந்து ஒன்று உள்ளது. ஆனால் சற்று வேறு மாதிரியான சந்து. துபாயிலேயே பல்லாண்டுக் காலமாக வசித்துக்கொண்டிருந்தாலும் நசீமா அங்கே இதுவரை சென்றதில்லை. மிகச்...