24. அருளோடு கலத்தல் சித்தர்களின் பணியை மீண்டும் நினைவுகூர்கிறேன். மனித இனம் என்று ஆணவத்தில் உறைந்து நிற்கிறதோ அப்பொழுது அவர்கள் உருவாகி ஆணவத்தை வேரறுத்து மனித இனத்தை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லுகிறார்கள். சித்தர்களின் இத்தகைய பணிக்கு அவர்கள் எதையும் செய்யத் தயங்குவதில்லை. நோக்கம் மட்டுமே...
Author - சுவாமி ஓம்கார்
23. அடையாளம் காணுதல் கும்பமேளா நடக்கும் இடத்தில் துறவிகள் மற்றும் மடாதிபதிகள் எனப் பலர் கூடுவார்கள். சித்தர்கள் பெரும்பாலும் துறவிகளாக இருப்பதில்லை. ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகே நமது கலாச்சாரத்தில் துறவு என்பது ஓங்கியது. நாதப் பாரம்பரியம் என்பது ஆதிசங்கரர் காலத்திற்கும் முன்பிருந்தே இருப்பது...
22. நட்சத்திரங்களும் நிலவும் இளவயதில் சக்தியுடன் துள்ளும் உடல், முதுமையில் சுமையாகிவிடுகிறது. உடல் என்பது புலன்கள் என்ற ஐந்து கம்பிகள் கொண்ட இரும்புக் கதவுடன் கட்டமைக்கப்பட்ட ஓர் சிறைச்சாலை. ஆணவம், கர்மம் மற்றும் மாயை என்ற மூன்று சுவர்கள் சூழ்ந்து இருக்கிறது. பிறப்பு என்ற தண்டனையுடன் சிறையில்...
21. கும்ப மேளா வழக்கமான பேய்ப் படங்களில் காட்டப்படும் காட்சி போல உங்களுக்குத் தோன்றலாம். சமாதிக் கோயிலில் இருந்த புகைப்படமும் எனக்கு வழி சொன்ன சாதுவும் ஒருவரே என்று உறுதியாகத் தோன்றியது. அப்படியானால் இது சித்தர்களின் மாபெரும் அதிசயமல்லவா..? இதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும். இத்தனை நாள்...
20. நைவேத்தியம் சாஸ்திரங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரமம் அது. சுற்றிலும் மலைகள் நிறைந்திருக்க நடுவே கிண்ணம் போன்றிருந்த சூழலில் ஆசிரமம் அமைந்திருந்தது. ஆசிரமத்தின் வழிபாட்டு அறையில் தினசரி பூஜைகளுக்குத் தயார் செய்து கொண்டிருந்தான் மாதவ்நாத். தன் குரு ப்ரணவநாதரின் வழிகாட்டுதலில் பூஜைகளையும்...
19. சம ஆதி சமாதி என்பது சித்தர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் எழுப்பப்பட்ட கோவில் என்பது நமக்குத் தெரியும். கடவுளைக் கும்பிடுவதை விட்டு இறந்த உடலைக் கும்பிடுவது சரியா என்று சிலர் வாதம் செய்வதைக் காண முடியும். சமாதி என்பது உடலை அடக்கம் செய்யும் இடம் எனக் கல்லறை போல நினைத்தால் அது...
18. மந்திரங்கள் சித்தர்களின் வார்த்தைகள் அர்த்தம் நிறைந்தவை. பெரும்பாலான மனிதர்கள் சித்தர்களின் வார்த்தைக்கு அர்த்தம் புரிந்துகொள்ள முயற்சிப்பதைவிட தங்களின் சோம்பேறித்தனத்திற்கும் ஆணவத்திற்கும் சாட்சியாகச் சித்தர்களின் வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ‘மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை’ என்ற...
17. அது வேறு உலகம் தோற்றமும் முடிவும் இல்லாத சில சித்தர்களைக் கண்டோம். இன்னும் எவ்வளவே பேர் இவ்வரிசையில் இருக்கிறார்கள். அவர்களையும் அறிவதற்கு முன்னால் சித்தர்களின் உலகைப் பற்றிச் சிறிது தெரிந்துகொள்வோம். சித்தர்கள் உலகம் எங்கே இருக்கிறது? அங்கே செல்ல என்ன மாதிரியான வாகனத்தில் செல்ல வேண்டும்? அந்த...
16. பர்த்ருஹரி ஒரு காலத்தில் இந்தப் பெயர் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் காணுமிடமெல்லாம் செந்தில்குமாரும், சரவணனும் நிறைந்திருப்பதைப் போல இந்தியா முழுவதும் பர்த்ருஹரி என்பது சர்வசாதாரணப் பெயராக இருந்தது. வரலாற்றுக் கோலத்தில் பர்த்ருஹரி என்ற பெயர் பல்வேறு முறை புள்ளி வைத்து உள்ளது. பல...
15. நீரில் இருந்து நீருக்கு… ஆயிரத்து நூறு ராணிகள் சூழ, அந்தப்புரத்தில் படுத்துச் சுகித்து இருந்தான் கோபிசந்த். ஆயிரத்து அறுநூறு அடிமைப் பெண்கள் அவர்களைச் சுற்றி நின்று சாமரம் வீசிக்கொண்டு இருந்தார்கள். இந்திர லோகத்தில் இருந்து இந்தக் காட்சியை கண்டால் இந்திரனுக்குக் கூடப் பொறாமை வரும் அளவுக்குக்...