கட்டடங்கள் எல்லாம் சிமெண்ட்டும் கல்லும் குழைத்துச் செய்யப்பட்ட கட்டுமானங்கள் மட்டும் அல்ல. சில நம் உயிரோடும் உணர்வோடும் பிணைந்தவை. அதனாலேயே இரட்டைக்கோபுரங்கள் தாக்கப்பட்டது இன்னமும் அமெரிக்காவில் வருத்தமான ஒரு நிகழ்வாக இருக்கிறது. சீக்கியரின் ஆலயத்திற்குள் இந்திய இராணுவம் நுழைந்ததும்கூட...
Author - பத்மா அர்விந்த்
சமூக வலைத்தளங்கள் மூலமாக மிகக் குறுகிய காலத்தில் நல்ல செய்திகளைவிடப் பரபரப்பான செய்திகள், காட்டுத்தீயாகப் பரவுகின்றன. அது மணிப்பூர் காணொளியானாலும் சரி, இலான் மஸ்க்கின் ஒசெம்பிக் (Ozempic) பயன்பாடானாலும் சரி அல்லது எங்கேனும் யார் தலையையாவது யாராவது தீவிரவாதத்தில் வெட்டிய காணொளியானாலும் சரி…...
உலகம் உண்ணும் உணவுப் பொருள்களில் பெரும்பாலும் இருப்பது மாவுச் சத்து. இத்தாலியர் உணவில் மைதா அல்லது கோதுமை மாவில் செய்த பாஸ்தா. அமெரிக்கர்களின் சாண்ட்விச்சில் பிரெட். வட இந்தியர்களின் உணவில் கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தி. சீனர்கள், இந்தியர்கள், தாய்லாந்து வியட்நாமியரின் உணவில் அரிசியால்...
பலரும் அண்ணாந்து பார்க்கும் வண்ணம் உயர உயரப் பறந்துகொண்டிருந்த ஒரு வண்ணமயமான பலூன் கொஞ்சம் கொஞ்சமாகத் தரையில் இறங்கினால், ஒரு வித வருத்தமே ஏற்படும். எப்போதாவது அதீத பொருளாதார நெருக்கடியில் பலருக்குக் கடன் கொடுத்துவிட்டு, நமக்கே ஒரு நெருக்கடி வரும் போது அதைத் திரும்பக் கேட்க முடியாமலும் அவர்களாகக்...
இம்முறை எப்படியாவது உக்ரைன் நேட்டோவில் இணைக்கப்பட்டுவிடும் என்று உலகம் எதிர்பார்த்தது. நடக்கவில்லை. அமைதியும் இனிமையுமான சூழல் இருக்கும் வீடுகளில் வசிக்கும் மனிதர்கள் உடல், மனநலத்துடன் இருப்பதைப்போல உலக அளவில் அமைதியான சூழலில் இருக்கும் நாடுகளில் வாழும் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். எனவே...
வெள்ளை மாளிகைக்குள் வெள்ளைப்பொடியா? யார் புகைத்திருப்பார்கள் என்பதை விட அது எப்படி உளவுத்துறை மீறி அங்கே வந்திருக்க முடியும் என்பதே மிகப்பெரிய கேள்வியாகச் சென்ற வாரம் இருந்திருக்கிறது. மனிதனுக்குப் போதை தேவையாக இருக்கிறது. தன்னுடைய சோகம், தீர்க்க முடியாத பிரச்னைகளிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்க...
மக்களாட்சி நடக்கின்ற நாட்டில், தேர்தலில போட்டியிடும் தலைவர்களின் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன பின்விளைவுகள் வரக்கூடும் என்பது அறிந்து, வாக்களிக்க வேண்டும். கட்சி சார்பில் அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் சேர்ந்து வாக்களிக்கும் போது அபாயகரமான கொள்கைப்பிடிப்பு உடைய ஒருவர்...
இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடனின் சந்திப்பு பல எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே ஒருவாறாக நடந்து முடிந்தது. அமெரிக்காவிற்கு, அமெரிக்க அதிபர்களுடைய அழைப்பை ஏற்றுப் பல பாரதப் பிரதமர்கள் இதற்குமுன் வந்து காங்கிரசில் பேசிவிட்டு, வெள்ளை மாளிகையில் விருந்துண்டு சென்றிருக்கிறார்கள். அதிபர்...
காலையில் அமைதியாய்ப் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள் திலிப்போன்சா. திடீரென அம்மாவின் ‘திலிப்போன்சா திலிப்போன்சா’ என்ற பதற்றமான குரலும் அவளை நிலத்தில் தள்ளிய கையும் புரியாமல் பாம்பு போல ஊர்ந்து அடுத்த அறைக்குள் அவளும் அம்மாவும் சென்று, அவளின் தம்பியைத் தூக்கிக்கொண்டு, புத்தகப்பையில் சில...
எடை ஏன் ஏறுகிறது? ஏறியதை எப்படி இறக்குவது? நான் குறைந்த அளவு உணவையே உண்ணுகிறேன். தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளுகிறேன். என் fitbit ஐக் கவனியுங்கள். 10000 அடிகளைத் தாண்டும். ஆனால் என் எடை என்னவோ திடீரென அதிகரித்துவிட்டது. இப்போது ஓர் அரைக்கிலோகூடக் குறைய மாட்டேன் என்கிறது என உடல்நல மருத்துவரிடம்...