உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஒரு லட்சம் ரஷ்யப் போர்வீரர்களும், அதே அளவு உக்ரைன் வீரர்களும் உயிரிழந்திருக்கின்றனர். பல்லாயிரணக்கான பொதுமக்களும் உயிரிழந்தனர். போருக்கு முன்னதான உலகப் பொருளாதார மதிப்பில் இருந்து கிட்டத்தட்ட 2.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்...
Author - பத்மா அர்விந்த்
அயோத்தி எப்படி இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உரிமை கொண்டாடும் கலவர பூமியாக இருக்கிறதோ, காஷ்மீர் எப்படி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே தீராப்பிரச்னையாக இருக்கிறதோ/ இருந்ததோ அதேபோல ஜெருசலமும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தினியாவிற்கும் இடையே ஒரு தலைவலி. மதங்களால் அன்பு பரவுகிறதோ இல்லையோ, மத...
இந்தியாவில் திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வது பரவலாகி வருகிறது. அதனை ஒப்புக்கொள்ளாத பலர், கலாசாரத்துக்கு இழுக்கு எனக் குறை சொல்லும் முந்தைய தலைமுறையினர். அவர்கள் குற்றம் சாட்டுவது மேற்கத்திய நாகரிகத்தினை. பொதுவாகவே அமெரிக்காவில் வசிக்கும் பலருக்குமே அமெரிக்கக் கலாசாரத்தைப் பற்றிய தவறான புரிதலும்...
வான்வெளியில் மணிக்கு 70 மைல் வேகத்தில் ஒரு பலூன் பறந்துகொண்டிருக்கிறது. வண்ணமயமான பலூன்கள் பறப்பது கண்ணுக்கு அழகு! ஆனால் இவை உலோகங்களால் செய்யப்பட்ட, வேவு பார்க்கும் அண்டைநாட்டுப் பலூன்கள். சுட்டுப் பொசுக்கவும் முடியாது. ஏனெனில், கீழே விழும் துகள்கள் மக்களுக்கு அபாயத்தை உண்டு பண்ணக்கூடியவை, ஆனால்...
காவல் துறை என்பது பல அடுக்குகளைக் கொண்டது. சாலையோர ரோந்துப் பணி, துப்பறியும் பணி, போதைப்பொருட்கள் தடுக்கும் குழு, திறனாய்வுக்குழு, கல்விக்குழு மற்றும் சட்டதிட்ட ஆலோசகர்கள் குழு, கொள்கைகள் குழு சமூகப் பணிக் குழு, இதைத்தவிர மக்கள் பணிக்குழு எல்லாம் உள்ளடக்கியதே காவலர் துறை. இரட்டைக்கோபுரங்கள்...
தினமும் 20 சிகரெட்டுக்களுக்கு மேல் புகை பிடிப்பதும், 5 பாட்டில்களுக்கு மேல் மது அருந்துவதும் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும், நோய்க்கான அறிகுறிகள் தெரியவந்தும், படி ஏறியிறங்கும் போது மூச்சிரைத்தும், புற்றுநோய் என்று ஒரு நாள் மருத்துவர் சொல்லும் போது அதிர்ச்சி வந்து, ‘எனக்கா...
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி ஓராண்டு நெருங்குகிறது. இதோ அதோ என்கிறார்களே தவிர போர் முடிவதற்கான அறிகுறியே இல்லை. ஜெயித்துவிடுவோம், ஜெயித்துவிடுவோம் என்று பிரதி உத்திராயண, தட்சிணாயன காலத் தொடக்கங்களில் விளாதிமிர் புதின் அறிவித்துக்கொண்டிருக்கிறார். உக்ரைன் அதிபரோ, ஒவ்வொரு பிரதோஷத்துக்கும்...
ஒரு பக்கம் தமிழகத்தில் சமத்துவப் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்து முடிந்த வேளையில் அமெரிக்காவும் மார்ட்டின் லூதர் கிங்கின் நாளைக் கொண்டாடி மகிழ்ந்தது. சமத்துவ நாட்கள் கொண்டாடவோ அல்லது சமத்துவ நீதியைப் பறைசாற்றவோ நம் அரசியல்வாதிகளுக்கு ஒரு தினம் தேவையில்லை. மேடை கிடைக்கும் போதெல்லாம் முழங்கத் தயாராகவே...
சென்ற வாரம் அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் லிபியாவுக்குச் சென்று பிரதமரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதென்னடா புதிய நல்லுறவு என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் லிபியாவுக்கும் அமெரிக்காவும் ஆதி முதல் ஏழாம் பொருத்தம் என்பது அண்ட...
நமது நாட்டில் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதெல்லாம் மிகவும் எளிதான செயல். நல்ல வாக்கு வித்தியாசத்தில் வென்ற கட்சி யாரைக் கைகாட்டுகிறதோ அவரே சபாநாயகர். ஆனால் அமெரிக்கா அப்படி இல்லை. ஒன்றல்ல இரண்டல்ல. பதினைந்து முறை வாக்களிக்க வேண்டும். விளையாட்டல்ல. உண்மையாகவே. ஏன் 15 முறை வாக்களிப்பு? எதனால் இத்தனை...